பாடல் #32722
துதி கன மகிமை
🔤 Thuthi Kana Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி கன மகிமை இயேசுவுக்கே - துாய நாமமதைப் புகழ்ந்தேத்திடுவோம் 1. ஜெயத்துடனே நம்மை நடத்தினார் - உயர் நன்மைகளால் முடிசூட்டினார். நன்றியால் நிறைந்துள்ள பொங்கி வழிந்திடுதே நாதனைப் புகழ்ந்திடுவோம் - துதி 2. காலை நிழலது சாய்வது போல் - மாறி பாய்ந்திடுதே இக வாழ்வதுவோ மயங்கிடாதோர் நல் சுதந்திரம் வானுலகில் வைத்தவர் அழைக்கிறாரே - துதி 3. பாரி எம்மை அவர் பிரித்தெடுத்து - பெரும் ஜாதியாக்கி உபதேசத்தினால் மாதிரத்தோர்க்குயர் சுவிசேஷம் ஈந்திட மன்னவன் கண்டனரே - துதி 4. நிறுத்திடவே தம்முன் நிர்மலராஜ் - திரு சரீரத்தின் வழியும் மரணத்தினால் நம்பிக்கையின் சுவிசேஷத்தில் நிலைத்திட அம்புவி தனில் அழைத்தார் - துதி 5. சேர்த்திடவே பூவில் சீர் பலனை - தேடி கூட்டிட சீக்கிரம் வந்துடுவார் சீயோனே பார் உந்தன் வேலை முடிந்திடுதே சிந்தை செய்தானந்திப்பாய் - துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Kana Makimai Yesuvukkae - Thuாya Naamamathaip Pugazhnthaetthituvom 1. Jeyatthudanae Nammai Natatthinaar - Uyar Nanmaigalaal Mutisoottinaar. Nanriyaal Nirainthulla Pongki Vazhinthituthae Naadhanaip Pugazhnthituvom - Thuthi 2. Kaalai Nizhalathu Saayvathu Pol - Maari Paaynthituthae Iga Vaazhvathuvo Mayangkitaathor Nal Sudhanthiram Vaanulakil Vaitthavar Azhaikkiraarae - Thuthi 3. Paari Emmai Avar Piritthetutthu - Perum Jaathiyaakki Ubathaesatthinaal Maathiratthorkkuyar Suvisaesham Eenthida Mannavan Kandanarae - Thuthi 4. Nirutthidavae Thammun Nirmalaraaj - Thiru Sareeratthin Vazhiyum Maranatthinaal Nampikkaiyin Suvisaeshatthil Nilaitthida Ampuvi Thanil Azhaitthaar - Thuthi 5. Saertthidavae Poovil Seer Palanai - Thaeti Koottida Seekkiram Vanthutuvaar Seeyonae Paar Undhan Vaelai Mutinthituthae Sinthai Seythaananthippaay - Thuthi