பாடல் #32719
இயேசுன்னை அழைக்கிறார்
🔤 Yesunnai Azhaikkiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுன்னை அழைக்கிறார் - இன்ப சத்தம் கேளாயோ? இன்னமும் தாமதமேன் இரட்சணிய நாளிதுவே 1. கல்வாரி குருசினிலே கள்வரின் மத்தியிலே குருதி சிந்தி கிரயமீந்தார் கர்த்தர் இயேசுந்தனுக்காய் - இயேசு 2. கிருபை வெளிப்பட்டது கிறிஸ்தேசு பிரசன்னத்தால் சுவிசேஷமே இந்ததுவே ஜீவனும் அழியாமையையும் - இயேசு 3. பாவ ஜீவியத்தை நீ போற்றிடுவாய் இன்னும் பரிகரிப்பார் பாவத்தையும் சாபம் மரணத்தையும் - இயேசு 4. மாநிலத்தின் இன்பங்கள் மாறிடுமே அழிந்தே மாய்ந்திடாதே வாஞ்சிப்பாயே மன்னவன் இயேசுவையே - இயேசு 5. ஆதரவில்லாதவர் அண்டினால் இயேசுவையே ஆனந்தமும் ஈந்திடுவார் அன்பர் சமாதானமும் - இயேசு 6. ஜீவாகமமதில் உம் நாமம் பதித்திடுவார் ஜீவ கிரீடம் தானளிப்பார். ஜீவனுடன் வாழவே - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesunnai Azhaikkiraar - Inba Sattham Kaelaayo? Innamum Thaamathamaen Iratsaniya Naalithuvae 1. Kalvaari Kurusinilae Kalvarin Matthiyilae Kuruthi Sinthi Kirayameenthaar Kartthar Yesundhanukkaay - Yesu 2. Kirupai Velippattathu Kiristhaesu Pirasannatthaal Suvisaeshamae Indhathuvae Jeevanum Azhiyaamaiyaiyum - Yesu 3. Paava Jeeviyatthai Nee Porrituvaay Innum Parigarippaar Paavatthaiyum Saabam Maranatthaiyum - Yesu 4. Maanilatthin Inbanggal Maaritumae Azhinthae Maaynthitaathae Vaanjsippaayae Mannavan Yesuvaiyae - Yesu 5. Aadharavillaadhavar Antinaal Yesuvaiyae Aanandhamum Eenthituvaar Anbar Samaathaanamum - Yesu 6. Jeevaagamamathil Um Naamam Pathitthituvaar Jeeva Kireedam Thaanalippaar. Jeevanudan Vaazhavae - Yesu