பாடல் #32717
மா மகத்வம் விண்ணிலே
🔤 Maa Makathvam Vinnilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மா மகத்வம் விண்ணிலே மண்ணிலே சமாதானம் 1. விண்ணைத் துறந்து ஆம் மண்ணிலிறங்கியே முன்னனை மீதினிலே தன்னிகரில்லா தேவ சுதனிவர் கன்னிகையிற் பிறந்தார் - மா 2. தாழ்மையின் ரூபமும் ஏழையின் கோலமும் பாழ் நரர்க்காய் எடுத்தே வாழ்விக்க வந்துட்ட மெய்யொளியாயினார் வாழ்த்தி வணங்கிடுவோம் - மா 3. வான் புவி யாவும் படைத்த தேவனே வைக்குமிடம் குடில் வாருமே தாழ்த்தி தாரும் உம் உள்ளத்தை வைக்க இப்பாலகனை - மா 4. மானிடர் மீதவர்க்கேன் இந்த பாசமே மாமிசத்தில் வரவே மண்ணுருவானோரை மாசற்றோராக்கிட மின்னுருவாய் ஜெனித்தார்ஷ- மா 5. இன்னிசை முழங்க இம்மானுவேலனே இந்நிலத்தே துதிப்போம் இரட்சகன் மேல் துதி தோத்திரம் சாற்றியே இன்றென்றும் பாடிடுவோம் - மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maa Makathvam Vinnilae Mannilae Samaathaanam 1. Vinnaith Thuranthu Aam Mannilirangkiyae Munnanai Meethinilae Thannigarillaa Thaeva Sudhanivar Kannikaiyir Piranthaar - Maa 2. Thaazhmaiyin Roobamum Aezhaiyin Kolamum Paazh Nararkkaay Etutthae Vaazhvikka Vanthutta Meyyoliyaayinaar Vaazhtthi Vanangkituvom - Maa 3. Vaan Puvi Yaavum Pataittha Devanae Vaikkumidam Kutil Vaarumae Thaazhtthi Thaarum Um Ullatthai Vaikka Ippaalakanai - Maa 4. Maanidar Meedhavarkkaen Indha Paasamae Maamisatthil Varavae Mannuruvaanorai Maasarroraakkida Minnuruvaay Jenitthaarsha- Maa 5. Innisai Muzhangga Immaanuvaelanae Innilatthae Thuthippom Iratsakan Mael Thuthi Thotthiram Saarriyae Inrenrum Paatituvom - Maa