பாடல் #32715
யாரிவர்கள் பாடுவோரே
🔤 Yaarivarkal Paatuvorae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யாரிவர்கள் பாடுவோரே யாருமறியாப் புதுப்பாட்டினை ஆசை இயேசுவின் பின் சென்றோரிவரே அனுதினம் பாடு சகித்தோர் அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகிறார் அன்பினால் ஜீவனை வைத்ததாலே அன்பர் திரு முகம் காண்பார் 2. சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல சித்தம் தானே வெறுத்து சாட்டியுள்ளார் சீரிய சேவை செய்ததினாலே சீயோனிலென்றும் நின்றிடுவார் - அல்லே 3. தாதையின் நாமம் நெற்றியிலேற்று தீதில்லா வார்த்தை நாவில் உள்ளோர் தேவ சிங்காசனம் முன் நிற்கும் இவர்கள் தேசுயர் தேவ ஊழியரே - அல்லே 4. மாந்தரினின்றும் மாநிலம் நின்றும் மாண்புறு முதற்பலன் மீட்படைந்தோர் காசினி மீதிலே கறை திரை யில்லாத கற்புள்ள கன்னியரிவரே - அல்லே 5. வனப்பு வாய்ந்த வட புறத்தில் வல்லமையால் உயர் பர்வதம் வான் புவி மகிழ்வுடன் நோக்கும் சீயோனே மகா ராஜன் திருநகரம் - அல்லே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaarivarkal Paatuvorae Yaarumariyaap Puthuppaattinai Aasai Yesuvin Pin Senrorivarae Anuthinam Paatu Sakitthor Allaelooyaa Seeyonilae Aanandhamaay Paatukiraar Anpinaal Jeevanai Vaitthathaalae Anbar Thiru Mugam Kaanpaar 2. Saandhamaay Aattukkutti Pola Sittham Thaanae Verutthu Saattiyullaar Seeriya Saevai Seythathinaalae Seeyonilenrum Ninrituvaar - Allae 3. Thaathaiyin Naamam Nerriyilaerru Theethillaa Vaartthai Naavil Ullor Thaeva Singkaasanam Mun Nirkum Ivarkal Thaesuyar Thaeva Oozhiyarae - Allae 4. Maandharininrum Maanilam Ninrum Maanpuru Mudharpalan Meetpatainthor Kaasini Meethilae Karai Thirai Yillaadha Karpulla Kanniyarivarae - Allae 5. Vanappu Vaayndha Vata Puratthil Vallamaiyaal Uyar Parvatham Vaan Puvi Makizhvudan Nokkum Seeyonae Makaa Raajan Thirunakaram - Allae