பாடல் #32712
சர்வ வல்லவர் போற்றிப்
🔤 Sarva Vallavar Porrip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சர்வ வல்லவர் போற்றிப் பாடுவோம் - நாம் போற்றிப் பாடுவோம் - நாம் இன்றும் என்றுமாய் சென்ற நாளெல்லாம் நம்மை காத்திட்டாரே சர்வ வல்லவர் துதித்திடுவோம் எல்லாக் கனம் மகிமையும் அவர்க்கே நாம் செலுத்திடுவோம் நாம் செலுத்திடுவோம் எல்லா துதிக்கும் நல் பாத்திரரே நாமும் சேர்ந்து போற்றிடுவோம் 2. பாவம் பார்த்தால் இளைத்திருந்த என்னைப் பரன் தேடினீரோ என்னை தேற்றவே பூவில் எங்கும் காணாப் பேரின்ப இளைப்பாறுதல் பெற்றிட செய்தீர் - எல்லா 3. மாய உலகம் அன்பில் கொண்டிருந்த என்னை மா தயவால் மீட்டுக் கண்டெடுத்தார் மெல்கிசேதேக்கின் அபிஷேகத்தினால் எந்தன் உள்ளம் இளைப்பாறச் செய்தீர் - எல்லா 4. நிந்தை பரிகாசம் பாடு சகித்தோராய்ப் பாளயப் புறம்பே தள்ளப்பட்டோராய் நம் பிதாவின் சித்தம் செய்திடவே இளைப்பாறுதல் நமக்கீந்தனரே - எல்லா 5. யோர்தானை போல துன்பம் எதிர்த்தாலும் யோசுவாவின் தேவன் நம்மோடிருப்பதால் யோர்தானின் கற்கள் நின்றது போல் நிற்போம் இளைப்பாறித் தைரியமாய் - எல்லா 6. சீயோன் ராஜா வானில் வேகம் வருவதால் அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போமே அன்பர் இயேசு நேசர் நமக்காக ஆவலுடன் எதிர் நோக்கி நிற்கிறான் - எல்லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sarva Vallavar Porrip Paatuvom - Naam Porrip Paatuvom - Naam Inrum Enrumaay Sendra Naalellaam Nammai Kaatthittaarae Sarva Vallavar Thuthitthituvom Ellaak Kanam Makimaiyum Avarkkae Naam Selutthituvom Naam Selutthituvom Ellaa Thuthikkum Nal Paatthirarae Naamum Saernthu Porrituvom 2. Paavam Paartthaal Ilaitthirundha Ennaip Paran Thaetineero Ennai Thaertravae Poovil Engkum Kaanaap Paerinba Ilaippaarudhal Perrida Seytheer - Ellaa 3. Maaya Ulakam Anpil Kontirundha Ennai Maa Thayavaal Meettuk Kantetutthaar Melkisaethaekkin Apishaegatthinaal Endhan Ullam Ilaippaarach Seytheer - Ellaa 4. Ninthai Parikaasam Paatu Sakitthoraayp Paalayap Purampae Thallappattoraay Nam Pithaavin Sittham Seythidavae Ilaippaarudhal Namakkeendhanarae - Ellaa 5. Yorthaanai Pola Thunbam Ethirtthaalum Yosuvaavin Devan Nammotiruppathaal Yorthaanin Karkal Nindrathu Pol Nirpom Ilaippaarith Thairiyamaay - Ellaa 6. Seeyon Raajaa Vaanil Vaegam Varuvathaal Allaelooyaa Paati Aarpparippomae Anbar Yesu Naesar Namakkaaga Aavaludan Ethir Nokki Nirkiraan - Ellaa