பாடல் #32710
தேவ தேவன் பாலகனாய்
🔤 Thaeva Devan Paalakanaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவ தேவன் பாலகனாய் தேவ லோகம் துறந்தவராய் மானிடரின் சாபம் போக்க மாநிலத்தில் அவதரித்தார் அல்லேலூயா! அல்லேலூயா! அற்புத பாலகன் இயேசுவுக்கே 2. பரம சேனை இரவில் தோன்றி பாரில் பாடி மகிழ்ந்திடுவேன் ஆ நிறையின் குடில் சிறக்க ஆதவனாய் உதித்தனரே - அல்லே 3. ஆயர் மனது அதிசயிக்க பேயின் உள்ளம் நடுநடுங்க தாயின் மேல் அன்புள்ளோராய் தயாபரன் தான் அவதரித்தார் - அல்லே 4. லோக பாவம் சுமப்பதற்கு தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்று வேதம் நிறைவேற்றுவதற்கே ஆதியாக அவதரித்தீர் - அல்லே 5.தாரகையாக விளங்கிடவே பாரில் என்னை நடந்திடவே யாருமில்லா என்னைத் தேடி அண்ணலே நீர் ஆதரித்தீர் - அல்லே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaeva Devan Paalakanaay Thaeva Logam Thurandhavaraay Maanidarin Saabam Pokka Maanilatthil Avatharitthaar Allaelooyaa! Allaelooyaa! Arpudha Paalakan Yesuvukkae 2. Parama Saenai Iravil Thonri Paaril Paati Makizhnthituvaen Aa Niraiyin Kutil Sirakka Aadhavanaay Uthitthanarae - Allae 3. Aayar Manathu Athisayikka Paeyin Ullam Natunatungga Thaayin Mael Anpulloraay Thayaabaran Thaan Avatharitthaar - Allae 4. Loga Paavam Sumappatharku Thaagam Theerkkum Jeeva Oorru Vaedham Niraivaerruvatharkae Aathiyaaga Avatharittheer - Allae 5.thaarakaiyaaga Vilangkidavae Paaril Ennai Natanthidavae Yaarumillaa Ennaith Thaeti Annalae Neer Aadharittheer - Allae