பாடல் #32709
கர்த்தராம் இயேசுவை
🔤 Karttharaam Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தராம் இயேசுவை துதிப்போம் கரம் குவித்தவர் என்றென்றும் 1. சென்ற நாள்களிலெல்லாம் சீர்கரத்தாலே சேர்த்தவர் கண்மணி போல் அணைத்தார் திருப்தி மலரென்றும் துதித்திடுவோம் - கர்த் 2. சோதனையாலுள்ளம் சேர்ந்திட்ட வேளையில் சொரிந்தனரோ பெலன் கிருபையில் நிலைக்க தூயனைத் துதித்து என்றும் வாழ்த்திடுவோம் - கர்த் 3. பாதையின் பாடுகள் பல்கிய நேரத்தில் ஆதரித்தாரவர் வார்த்தையின் பெலத்தால் சிநேகத்தின் ஆழம் நினைத்திடுவோம் - கர்த் 4. பாரங்களாலுள்ளம் பதைத்திட்ட வேளையில் ஆற்றினாரே அன்பின் தூதுகள் அளித்தே அண்ணலைத் துதித்து நாம் பாடிடுவோம் - கர்த் 5. தேற்றுவாரின்றியே தியங்கின வேளையில் தாயினும் மேலவர் ஆறுதலளித்தார் தந்திடுவேன் துதி என்றென்றும் - கர்த் 6. நானுனக்காய் யுத்தம் செய்திடுவே னென்று நவின்றவர் எந்தன் கரம் பிடித்தாரே நாதனை என்றும் நாம் துதித்திடுவோம் - கர்த்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaam Yesuvai Thuthippom Karam Kuvitthavar Enrenrum 1. Sendra Naalkalilellaam Seerkaratthaalae Saertthavar Kanmani Pol Anaitthaar Thirupthi Malarenrum Thuthitthituvom - Karth 2. Sodhanaiyaalullam Saernthitta Vaelaiyil Sorindhanaro Pelan Kirupaiyil Nilaikka Thooyanaith Thuthitthu Enrum Vaazhtthituvom - Karth 3. Paathaiyin Paatugal Palkiya Naeratthil Aadharitthaaravar Vaartthaiyin Pelatthaal Sinaegatthin Aazham Ninaitthituvom - Karth 4. Paaranggalaalullam Pathaitthitta Vaelaiyil Aarrinaarae Anpin Thoothugal Alitthae Annalaith Thuthitthu Naam Paatituvom - Karth 5. Thaerruvaarinriyae Thiyangkina Vaelaiyil Thaayinum Maelavar Aarudhalalitthaar Thanthituvaen Thuthi Enrenrum - Karth 6. Naanunakkaay Yuttham Seythituvae Nenru Navindravar Endhan Karam Pititthaarae Naadhanai Enrum Naam Thuthitthituvom - Karth