பாடல் #32707
என்னையும் இயேசுவே
🔤 Ennaiyum Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என்னையும் இயேசுவே விஸ்வாசித்தீர் அன்பினாலே தேடி கண்டெடுத்தார் பாரினில் பாவத்தின் ஆழ்ந்த வேளை பார்த்தீர் கடைக் கணித்தே அணைத்தீர் ஆ! இயேசுவே என்றென்றும் நேசித்தீரோ நீசனென்னையும் விஸ்வாசித்தீரோ - இம் மாய உலகத்தில் மாண்ட என்னை மண்ணின் சாயல் நீக்கி மாற்றிடவா 2. ஆபிரகாமை அழைக்கும் முன்னே அற்புதம் அவன் சந்ததி மேவி விஸ்வாசி தே ஓர் கானான் மேதினி மீதில் உண்டாக்கினீரே 3. யாக்கோபின் சந்ததி அழியாது. காத்திடவே ஞானக் கன்மலையை மேய்ப்பராய் நின்றவர் தாகம் தீர்த்த தாய் போல் நடந்து விஸ்வாசித்தீரே 4. நான் உம்மை காணுமுன் நீர் கண்டீர் நான் அல்ல நீரே விஸ்வாசித்தீரே மேலோகில் உம் அன்பர்க்காய் வைத்தது ஏழை யான் பெறவே அருள்வீர் 5. ஆனந்தமே பரலோகத்திலே ஆச்சரியமே பரன் மீட்டதினால் கானங்கள் பாடிக் களிப்புடனே கர்த்தரை நித்தம் விஸ்வாசிப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ennaiyum Yesuvae Visvaasittheer Anpinaalae Thaeti Kantetutthaar Paarinil Paavatthin Aazhndha Vaelai Paarttheer Kataik Kanitthae Anaittheer Aa! Yesuvae Enrenrum Naesittheero Neesanennaiyum Visvaasittheero - Im Maaya Ulakatthil Maanda Ennai Mannin Saayal Neekki Maarridavaa 2. Aapirakaamai Azhaikkum Munnae Arpudham Avan Sandhathi Maevi Visvaasi Thae Or Kaanaan Maethini Meethil Untaakkineerae 3. Yaakkopin Sandhathi Azhiyaathu. Kaatthidavae Njaanak Kanmalaiyai Maeypparaay Nindravar Thaagam Theerttha Thaay Pol Natanthu Visvaasittheerae 4. Naan Ummai Kaanumun Neer Kanteer Naan Alla Neerae Visvaasittheerae Maelokil Um Anbarkkaay Vaitthathu Aezhai Yaan Peravae Arulveer 5. Aanandhamae Paralogatthilae Aacchariyamae Paran Meettathinaal Kaananggal Paatik Kalippudanae Karttharai Nittham Visvaasippaenae