பாடல் #32701
மதுர கீதம் ஆ ஆ ஆ
🔤 Mathura Keedham Aa Aa Aa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மதுர கீதம் ஆ! ஆ! ஆ! மகிழ்ந்து பாடுவோம் 1. அளவில்லாத அன்பின் நல் உருவம் அன்பர் இயேசுவின் தினம் கண்டோம் அருளினால் ஆனந்தம் ஆர்ப்பரித்தே பாடுவோம் - மதுர 2. ஆதி லோகமதில் அஸ்திபாரம் மேவு முன்னதாக நம் நாமம் தாவி நினைவாக சீயோனில் ஜீவனுக்காய் வரைந்ததால் - மதுர 3. பாவியாய் உளை சேற்றினில் அமிழும் வேளை யெம்மைத் தாமரவணைத்தே ஜீவனூற்றியே சாவை நீக்கியே தேவ சுதராய்ச் சேர்த்ததால் - மதுர 4. ஜீவனுள்ள கற்கள் அவரில் சேர்த்துக் கட்டிடச் சீயோன் நகரில் அனுக்கிரகத்தால் ஆவியாலே அபிஷேகித்தார் ஆனந்தம் - மதுர 5. கீதம் பாடிய வேறொன்று மில்லையே நாதன் இன்ப நாமமதல்லால் வேதமும் ஜீவ நாதமும் பிர சாதமும் இயேசு வானதால் - மதுர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mathura Keedham Aa! Aa! Aa! Makizhnthu Paatuvom 1. Alavillaadha Anpin Nal Uruvam Anbar Yesuvin Thinam Kantom Arulinaal Aanandham Aarpparitthae Paatuvom - Mathura 2. Aathi Logamathil Asthipaaram Maevu Munnathaaga Nam Naamam Thaavi Ninaivaaga Seeyonil Jeevanukkaay Varaindhathaal - Mathura 3. Paaviyaay Ulai Saerrinil Amizhum Vaelai Yemmaith Thaamaravanaitthae Jeevanoorriyae Saavai Neekkiyae Thaeva Sudharaaych Saertthathaal - Mathura 4. Jeevanulla Karkal Avaril Saertthuk Kattidach Seeyon Nakaril Anukkirakatthaal Aaviyaalae Apishaekitthaar Aanandham - Mathura 5. Keedham Paatiya Vaeronru Millaiyae Naadhan Inba Naamamathallaal Vaedhamum Jeeva Naadhamum Pira Saadhamum Yesu Vaanathaal - Mathura