பாடல் #32696
எந்தன் ஆத்தும நேசரே
🎙 கிறிஸ்தவ பாடல்
1. எந்தன் ஆத்தும நேசரே என் உள்ளமே உந்தன் அன்பை நாடிடுதே உம்மைப் போல் ஒரு நேசரைக் காண்கிலேன் பூவிலே உயிர் தரும் இன்பம் நீர் அல்லேலூயா பாடிடுவேன் அகமகிழ்ந்து உம்மை துதித்திடுவேன் என்னையும் நீரே ஜீவனும் நீரே மன்னா என் மறைவிடமே 2. பெற்ற தாயினும் அன்பு மிகுந்தவரே உற்ற தந்தையின் சிறந்தவரே ஏற்றுக் கொண்டென்னை பாரினில் ஆதரவளித்திட மற்றோர் எனக்கில்லையே - அல் 3. உனக்காகவே யாவையும் செய்திடுவேன் என வாக்குத்தத்தம் செய்தவர் எனக்காக தன் திரு மைந்தனை ஈந்தவர் தனதகம் மாற்றுவாரோ? - அல் 4. பாவசாபத்தின் குழியினில் வீழ்ந்துமே நான் பரிதபிக்கையில் ரோகத்தினால் பரிவோடென்னைக் கரமதை நீட்டியுயர்த்திடப் பரன் மனதிரங்கினீரே- அல் 5. திரு ஆலயம் எந்தன் காயமதை உருவாக்கினீர் ஆவியினால் மறுரூபம் ஏகுவேன் ஆகாய மீதினில் மகிமையின் நாளதிலே - அல்