பாடல் #32693
மேகமீதில் தோன்றிடுவான்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. மேகமீதில் தோன்றிடுவான் எக்காளத்தொணியோடே வேகமாக இயேசுதான் வருவார். ஏகமாய் சித்தருடன் ஆ! ஆனந்தம் பேரானந்தம் ஆனந்த நாளிதுவே அல்லேலூயா ஆர்ப்பரி போடு அன்புச் சேர்ந்திடுவோம் 2. மண்ணின் சாயலை மாறியே நாம் வீண் சாயல் அடைந்துவிட்டோம் அண்ணல் இயேசு ஆவலைத் தீர்த்தே கண்ணீரைத் துடைத்திடுவார் 3. சொல்லொண்ணா பாடுகளை எண்ணாது சகித்தவரை காணும் வேளை அன்புடன் இயேசு அணைத்த அகமகிழ்வார் 4. ஏகமாக சிருஷ்டிகள் மிக ஏங்கித் தவித்திடு தே தேவ மைந்தன் வெளிப்படுவார் பூமியின் முதற்பலனாய் 5. ஜெயங்கொண்ட பரிசுத்தரே சீயோனின் சிகரமதில் தூய ஆட்டுக்குட்டியுடன் நேராய் இலங்கிடுவார்