பாடல் #32692
வான் பரன் இயேசு
🔤 Vaan Paran Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வான் பரன் இயேசு ராஜன் அவனியில் மானிடனாய் ஜெனித்தார் - வல்ல 1. ஸ்தோத்திர கீதம் மேய்ப்பரும் கேட்க தூதர்கள் வானில் துதி சாற்ற புல்லணை மீதினிலே பாலகனாய் பிறந்தவர் தான் இவரே - வான 2. மானிடர் பாவம் போக்கிடும் பலியாய் மாநில மீதில் உதித்தாரே சாவும் பேயும் நோயையும் ஜெயித்தவர் தான் இவரே - வான 3. மேய்ப்பனில்லாத ஆடுகள் போல மேதினி மீதில் அலைந்தேனே மேய்த்திடும் மீட்பராய் வந்துதித்த மேசியா தான் இவரே - வான 4. அன்புடன் தம்மை அண்டிடுவோரை ஆதரவாக அணைப்பார் அன்னையும் தந்தையும் போல் விளங்கும் ஆண்டவர் தான் இவரே - வான 5. இம்மானுவேலன் தன் திருப்பாதம் இன்பமுடன் பணிவோமே தோத்திரம் பாடியே போற்றிடுவேன் பாத்திரர் தான் இவரே - வான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaan Paran Yesu Raajan Avaniyil Maanidanaay Jenitthaar - Valla 1. Sthotthira Keedham Maeypparum Kaetka Thoodharkal Vaanil Thuthi Saartra Pullanai Meethinilae Paalakanaay Pirandhavar Thaan Ivarae - Vaana 2. Maanidar Paavam Pokkitum Paliyaay Maanila Meethil Uthitthaarae Saavum Paeyum Noyaiyum Jeyitthavar Thaan Ivarae - Vaana 3. Maeyppanillaadha Aatugal Pola Maethini Meethil Alainthaenae Maeytthitum Meetparaay Vanthuthittha Maesiyaa Thaan Ivarae - Vaana 4. Anpudan Thammai Antituvorai Aadharavaaga Anaippaar Annaiyum Thanthaiyum Pol Vilangkum Aandavar Thaan Ivarae - Vaana 5. Immaanuvaelan Than Thiruppaadham Inbamudan Panivomae Thotthiram Paatiyae Porrituvaen Paatthirar Thaan Ivarae - Vaana