பாடல் #32690
தேவன் இயேசு இரட்சகா
🎙 கிறிஸ்தவ பாடல்
தேவன் இயேசு இரட்சகா! தேவா சர்வ வல்லவர்! தேவா இயேசு நாயகா! தேவாதி தேவா மா நேசரே! கனிவுடன் இரங்குமே - கரமதை நீட்டுமே சுகமதை நீர் ஈயுமே - நம்பியே நான் நிற்கிறேன் பாவ பாரம் ஆழ்த்தையில் அன்பால் தேடி வந்தீரே பாய்ந்து மாளா இரட்சித்தீர் ஏழைக்கு ஆறுதல் நீரே நாதா - கனி நோய்கள் யாவும் ஏற்றவர் பேய் முற்றும் வென்றவர் காயம் அடைந்திடவே சாவையும் முற்றும் ஜெயித்தனரே - கனி காருண்ய மா வைத்தியரே திவ்ய ஒளஷதம் நீரே சாபம் தீர்த்திடவே மா சாபமாகித் தீர்ந்தீர் நீரே - கனி ஆத்தும் இன்ப நேசரே! மாற்றீர் ஆணை என்றுமே மேவியே வந்திடுவோரை தாயே நீர் அணைத்தாதரிப்பீர் - கனி