பாடல் #32689
சீயோன் மலையில்
🔤 Seeyon Malaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் மலையில் தேவ மகிமை எங்கும் வீசுதே சர்வ வல்ல தேவன் அரசாளுகின்றார் 1. பெருவெள்ளத்தில் இரைச்சலைப் போல் பலத்த இடி முழக்கங்களை போல் புதுப் பாட்டு தொனி அங்கு ஒலிக்கின்றதே மகிமைப் படுகின்றார் பரமபிதா - சீயோ 2. அங்கே மலைமேல் நிற்கின்றார் ஆட்டுக் குட்டி யானை வரும் அவரோடிணைந்து பிதா நாமம் நெற்றியில் அணிந்து நிற்கின்றார் பரிசுத்தர் கூட்டமே - சீயோ 3. வாயில் கபடம் இல்லை ஆடை தனில் குறையுமில்லை மானிடர் மத்தியில் முதல் பலனிவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் - சீயோ 4. அருமை இயேசுவின் பின்னே அலைந்து நடந்த பாதங்கள் மலையின் மீதிலே நின்று ஜொலிக்கின்றது அவர்கள் அப்போஸ்தல் ஊழியரே - சீயோ 5. சர்வ பூமியின்! பயத்துடன் கேள் சத்திய சுவிசேஷத்தை நித்திய சந்தோஷம் நிறைவாய்ப் பெறவே நீயும் வந்திடுவாய் தருணமிதுவே - சீயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Malaiyil Thaeva Makimai Engkum Veesuthae Sarva Valla Devan Arasaalukinraar 1. Peruvellatthil Iraicchalaip Pol Palattha Iti Muzhakkanggalai Pol Puthup Paattu Thoni Angku Olikkindrathae Makimaip Patukinraar Paramapithaa - Seeyo 2. Angkae Malaimael Nirkinraar Aattuk Kutti Yaanai Varum Avarotinainthu Pithaa Naamam Nerriyil Aninthu Nirkinraar Parisutthar Koottamae - Seeyo 3. Vaayil Kapatam Illai Aatai Thanil Kuraiyumillai Maanidar Matthiyil Mudhal Palanivarkal Ilatsatthu Naarpatthu Naalaayiram Paer - Seeyo 4. Arumai Yesuvin Pinnae Alainthu Natandha Paadhanggal Malaiyin Meethilae Ninru Jolikkindrathu Avarkal Apposthal Oozhiyarae - Seeyo 5. Sarva Poomiyin! Payatthudan Kael Satthiya Suvisaeshatthai Nitthiya Santhosham Niraivaayp Peravae Neeyum Vanthituvaay Tharunamithuvae - Seeyo