பாடல் #32688
தூய தூய தேவனை
🔤 Thooya Thooya Devanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய தூய தேவனை நம் போற்றி வெற்றிப் புகழ்ந்திடுவோம் 1. ஸ்தோத்திர கீதங்கள் முழங்கிடுதே - அல்லேலூயா அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் பாவமாம் சேற்றினில் புரண்டாலும் எம்மையே பாசமாய் இரங்கியே ரட்சித்தவரே - தூய 2. நன்றியால் உள்ளங்கள் நிறைந்திடுதே - அல்லேலூயா அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் எத்தனை துன்பங்கள் துயரங்கள் பெருகினும் இத்தனை கருணையால் தாங்கிடும் மா - தூய 3. ஆதரவளித்திடும் ஆருயிரே - அல்லேலூயா! அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் கோரமாய்ச் சோதனை சூழ்ந்திடும் வேளையில் மாறா தம் வார்த்தையால் தேற்றுவாரே - தூய 4. ஆவியில் பாடியே அகமகிழ்வோம் - அல்லேலூயா அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் மேலோக பாக்கியம் எண்ணிடும் வேளையில் மா பரமானந்தம் பொங்கிடுதே - தூய 5. அன்பின் மணாளனே வந்துடுவார் - அல்லேலூயா அல்லேலூயா! துதி ஸ்தோத்திரம் பூரண பரிசுத்த வான்களோடேகியே பரம் சீயோனில் நாம் வாழ்ந்திடுவோம் - தூய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooya Thooya Devanai Nam Porri Verrip Pugazhnthituvom 1. Sthotthira Keedhanggal Muzhangkituthae - Allaelooyaa Allaelooyaa! Thuthi Sthotthiram Paavamaam Saerrinil Purantaalum Emmaiyae Paasamaay Irangkiyae Ratsitthavarae - Thooya 2. Nanriyaal Ullanggal Nirainthituthae - Allaelooyaa Allaelooyaa! Thuthi Sthotthiram Etthanai Thunbanggal Thuyaranggal Perukinum Itthanai Karunaiyaal Thaangkitum Maa - Thooya 3. Aadharavalitthitum Aaruyirae - Allaelooyaa! Allaelooyaa! Thuthi Sthotthiram Koramaaych Sodhanai Soozhnthitum Vaelaiyil Maaraa Tham Vaartthaiyaal Thaerruvaarae - Thooya 4. Aaviyil Paatiyae Agamakizhvom - Allaelooyaa Allaelooyaa! Thuthi Sthotthiram Maeloga Paakkiyam Ennitum Vaelaiyil Maa Paramaanandham Pongkituthae - Thooya 5. Anpin Manaalanae Vanthutuvaar - Allaelooyaa Allaelooyaa! Thuthi Sthotthiram Poorana Parisuttha Vaankalotaekiyae Param Seeyonil Naam Vaazhnthituvom - Thooya