பாடல் #32687
பரிசுத்தாவியானவர் எங்கள்
🔤 Parisutthaaviyaanavar Enggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தாவியானவர் எங்கள் மீதினிலே - இறங்கி வல்லமையாக கிரியை செய்யும் 1. பெந்தெகொஸ்தின் தினமதிலே வந்திறங்கிய சீஷர்களை சந்திப்பதுபோல் ஏழைகள் மீது எந்தையே அமர்ந்திடுவீர் - பரி 2. பற்பல பாஷைகள் பேசிடுவோம் தற்பரன் மாண்பினை உழைத்திடுவோம் அற்புத அடையாளம் செய்திடப் பாரில் சொற்படி அருள் மாரி பொழிவீர் - பரி 3. பேயின் சக்தி தகர்ந்திடவே நோயின் பெலனும் அகன்றிடவே சோரும் உள்ளங்கள் உணர்ந்தெழும்பிடவே தாரும் ஓர் அபிஷேகம் தயவாய் - பரி 4. ஆதியன்பு குறைந்திடுதே ஆதிக் கிரியை மறைந்திடுதே ஆத்துமாக்கள் மாள்வதைக் காண ஆறுதல் இல்லையே சுவாமி - பரி 5. ஆவியால் உன் அன்பை ஆழ்ந்த ருசிக்க அளித்திடுமே அன்பில்லாத அனுபவம் நீங்க அன்பரே! இரங்கிடுவீரே - பரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthaaviyaanavar Enggal Meethinilae - Irangki Vallamaiyaaga Kiriyai Seyyum 1. Penthekosthin Thinamathilae Vanthirangkiya Seesharkalai Santhippathupol Aezhaigal Meethu Enthaiyae Amarnthituveer - Pari 2. Parpala Paashaigal Paesituvom Tharparan Maanpinai Uzhaitthituvom Arpudha Ataiyaalam Seythidap Paaril Sorpati Arul Maari Pozhiveer - Pari 3. Paeyin Sakthi Thakarnthidavae Noyin Pelanum Aganridavae Sorum Ullanggal Unarnthezhumpidavae Thaarum Or Apishaegam Thayavaay - Pari 4. Aathiyanpu Kurainthituthae Aathik Kiriyai Marainthituthae Aatthumaakkal Maalvathaik Kaana Aarudhal Illaiyae Suvaami - Pari 5. Aaviyaal Un Anpai Aazhndha Rusikka Alitthitumae Anpillaadha Anubavam Neengga Anbarae! Irangkituveerae - Pari