பாடல் #32685
தேவ எக்காளம்
🔤 Thaeva Ekkaalam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ எக்காளம் தொனிக்க தேவாதி தேவன் தோன்றுவார் 1. முன் மறைந்த அருமையானவர் முதலில் வருவார் இயேசு வுடன் பின்பு நாமும் அண்ணலோடு இன்பமடைவோம் என்றுமென்றும் - தேவ 2. அன்பர்களே ஆனந்தமாய் இன்முகம் கண்டிடுவார் மின்னல் போல இன்னல் தொலைய இன்பமே இனி என்றுமென்றும் - தேவ 3. பூரணரே பறந்திடுவார் பொன் முடியும் தரித்திடுவார் பாரிடத்தின் பாடு சகித்தோர் பாடி மகிழ்வோம் என்றுமென்றும் - தேவ 4. ஆயிரம் தூதர் சூழ அடியார் அரசாள அல்லேலூயா ஆர்ப்பரி தே ஆளுவோமே என்றுமென்றும் - தேவ 5. ஆருயிரே ஆதரையில் ஆண்டுகள் கடந்திடுதே என்று காண்பேன், எந்தன் உள்ளம் எண்ணி எண்ணி ஏங்கிடுதே - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Ekkaalam Thonikka Thaevaathi Devan Thonruvaar 1. Mun Maraindha Arumaiyaanavar Mudhalil Varuvaar Yesu Vudan Pinpu Naamum Annalotu Inbamataivom Enrumenrum - Thaeva 2. Anbarkalae Aanandhamaay Inmugam Kantituvaar Minnal Pola Innal Tholaiya Inbamae Ini Enrumenrum - Thaeva 3. Pooranarae Paranthituvaar Pon Mutiyum Tharitthituvaar Paaridatthin Paatu Sakitthor Paati Makizhvom Enrumenrum - Thaeva 4. Aayiram Thoodhar Soozha Atiyaar Arasaala Allaelooyaa Aarppari Thae Aaluvomae Enrumenrum - Thaeva 5. Aaruyirae Aadharaiyil Aantugal Katanthituthae Enru Kaanpaen, Endhan Ullam Enni Enni Aengkituthae - Thaeva