பாடல் #32683
கருணைக் கடலாம்
🔤 Karunaik Katalaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணைக் கடலாம் இயேசுவே கனிவுடனே இப்போ இரங்கிடுமே - எங்கள் கருணைக் கடலாம் இயேசுவே வாரும் வல்லமையாய் தாரும் வரங்களை வர்த்திக்க வேணும் விசுவாசத்தை புகழ்ந்திடவே திருநாமத்தை எங்கள் தாரகமற்ற தரணியோரை தாமதமின்றி மீட்டிட எழுந்திடுமே இந்நேரமே - எங்கள் அப்போஸ்தல காலம் போல அற்புதங்கள் அடையாளங்கள் அதிசய நாமத்தில் ஓங்கிட - எங்கள் முடவர் குதிக்க ஊமை துதிக்க செவிடர் குருடர் கூனரும் சுகமடைந்து உம்மைப் பாடிட எங்கள் கறைகளின்றி கற்பில் சிறந்து மன்னன் தோன்றும் வேளையில் பறந்திடவே சபை மேகத்தில் - எங்கள் தயாகரமே தஞ்சம் நீரே தியாகமே மேன்மையான தாசரே அபிஷேகித்து உபயோகியும் - எங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaik Katalaam Yesuvae Kanivudanae Ippo Irangkitumae - Enggal Karunaik Katalaam Yesuvae Vaarum Vallamaiyaay Thaarum Varanggalai Vartthikka Vaenum Visuvaasatthai Pugazhnthidavae Thirunaamatthai Enggal Thaarakamartra Tharaniyorai Thaamathaminri Meettida Ezhunthitumae Innaeramae - Enggal Apposthala Kaalam Pola Arpudhanggal Ataiyaalanggal Athisaya Naamatthil Ongkida - Enggal Mudavar Kuthikka Oomai Thuthikka Sevidar Kurudar Koonarum Sugamatainthu Ummaip Paatida Enggal Karaigalinri Karpil Siranthu Mannan Thonrum Vaelaiyil Paranthidavae Sapai Maegatthil - Enggal Thayaagaramae Thanjjam Neerae Thiyaagamae Maenmaiyaana Thaasarae Apishaekitthu Ubayokiyum - Enggal