பாடல் #32678
பாடியே பரனை துதி
🔤 Paatiyae Paranai Thuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடியே பரனை துதி மனமே - துதி மனமே கொண்டாடி துதி தினமே 1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்து நாதனைத் துதி மனமே நாளுக்கு நாள் செய் பல நன்மைக்காய் நாதனைத் துதி மனமே ஆதரவாய் எம்மைக் காத்ததினாலே தேவனை துதி மனமே - பாடி 2. நானிலந்தனிலெம் பாவங்கள் போக்கிய நாதனைத் துதி மனமே என்றும் என் மேல் வைத்த மாறிடா அன்புக்காக நாதனைத் துதி மனமே கானகமதிலே ஜீவ ஊற்று தேவனை துதி மனமே - பாடி 3. கிருபையாய் ஈந்த திருப்பலிக்கான நாதனைத் துதி மனமே கோரமாய் வந்த நோய்களைத் தீர்த்ததால் நாதனைத் துதி மனமே தாபரமாய் எம்மைத் தாங்கியதாலே தேவனை துதி மனமே - பாடி 4. கஷ்டமானாலும் நஷ்டமானாலும் நாதனைத் துதி மனமே பஞ்சம் பசியுடன் பக்கம் வந்தாலும் நாதனைத் துதி மனமே ஜீவனானாலும் மரணமாலும் தேவனை துதி மனமே - பாடி 5. ஏகமாய் எம்மை அன்பினால் இணைத்த நாதனைத் துதி மனமே அகமதை ஆவியால் ஆலயமாக்கிய நாதனைத் துதி மனமே தூதரிலும் எமை மேன்மையாக எண்ணிய தேவனை துதி மனமே - பாடி 6. உன்னத அழைப்பில் எம்மையே தெரிந்த நாதனைத் துதி மனமே பெலமுள்ள கரமதில் செங்கோலுமாக்கிய நாதனைத் துதி மனமே நீடூழி காலம் சாலேமில் வாழ்த்திட தேவனை துதி மனமே - பாடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatiyae Paranai Thuthi Manamae - Thuthi Manamae Kontaati Thuthi Thinamae 1. Sendra Naalellaam Karutthudan Kaatthu Naadhanaith Thuthi Manamae Naalukku Naal Sey Pala Nanmaikkaay Naadhanaith Thuthi Manamae Aadharavaay Emmaik Kaatthathinaalae Devanai Thuthi Manamae - Paati 2. Naanilandhanilem Paavanggal Pokkiya Naadhanaith Thuthi Manamae Enrum En Mael Vaittha Maaritaa Anpukkaaga Naadhanaith Thuthi Manamae Kaanakamathilae Jeeva Oorru Devanai Thuthi Manamae - Paati 3. Kirupaiyaay Eendha Thiruppalikkaana Naadhanaith Thuthi Manamae Koramaay Vandha Noykalaith Theertthathaal Naadhanaith Thuthi Manamae Thaabaramaay Emmaith Thaangkiyathaalae Devanai Thuthi Manamae - Paati 4. Kashtamaanaalum Nashtamaanaalum Naadhanaith Thuthi Manamae Panjjam Pasiyudan Pakkam Vanthaalum Naadhanaith Thuthi Manamae Jeevanaanaalum Maranamaalum Devanai Thuthi Manamae - Paati 5. Aegamaay Emmai Anpinaal Inaittha Naadhanaith Thuthi Manamae Agamathai Aaviyaal Aalayamaakkiya Naadhanaith Thuthi Manamae Thoodharilum Emai Maenmaiyaaga Enniya Devanai Thuthi Manamae - Paati 6. Unnatha Azhaippil Emmaiyae Therindha Naadhanaith Thuthi Manamae Pelamulla Karamathil Sengkolumaakkiya Naadhanaith Thuthi Manamae Neetoozhi Kaalam Saalaemil Vaazhtthida Devanai Thuthi Manamae - Paati