பாடல் #32676
என்று காண்பேனோ
🔤 Enru Kaanpaeno
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்று காண்பேனோ என் நேச இயேசு ராஜனை! - நான் 1. மேகமீதில் இன்ப ராஜன் இயேசுவும் காகளத் தொனியுடனே தோன்றும் வேளையில் போரில் ஜெயங்கொண்டோர் யாரும் கூடுவாரங்கே - என்று 2. தூயர் தாசர் ஆர்ப்பரித்து மே ஆவி ஆத்துமா சரீரம் மீட்பின் நாளிலே மன்னனின் மா மகிமை வண்ணம் மாறுவார் - என்று 3. ஆவல் விழித்து ஆசையாக ஆவியில் போராடி ஜெபித்து ஜெபவீரன் அண்ணல் இயேசு ஆதரவாய் அணைத்துக்கொள்வாரே - என்று 4. வீரமாய் எதிர்த்துச் சோபித்தேகினோர் சொல்லொண்ணாத பாடுகளை மண்ணில் சகித்தோர் கண்ணிமைப் பொழுதிலவர் விண்ணிலேகுவார் - என்று 5. நேசத்தினால் என் இதயம் பொங்கி பாயுதே நேசரே! நீர் வருமென்ற ஓசை கேட்குதே பாசத்தால் நான் சோகமடைந்தேன் - ஆ! மணாளனே! - என்று 6. எல்லையில்லா மகிமை வீசும் தேசமே செல்லவே நீ ஆயத்தமா? ஓ! மணாளியே! வல்லமையாய் இயேசுவோடு சேர்ந்து ஆளவே - என்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enru Kaanpaeno En Naesa Yesu Raajanai! - Naan 1. Maegameethil Inba Raajan Yesuvum Kaagalath Thoniyudanae Thonrum Vaelaiyil Poril Jeyangkontor Yaarum Kootuvaarangkae - Enru 2. Thooyar Thaasar Aarpparitthu Mae Aavi Aatthumaa Sareeram Meetpin Naalilae Mannanin Maa Makimai Vannam Maaruvaar - Enru 3. Aaval Vizhitthu Aasaiyaaga Aaviyil Poraati Jepitthu Jebaveeran Annal Yesu Aadharavaay Anaitthukkolvaarae - Enru 4. Veeramaay Ethirtthuch Sopitthaekinor Sollonnaadha Paatugalai Mannil Sakitthor Kannimaip Pozhuthilavar Vinnilaekuvaar - Enru 5. Naesatthinaal En Idhayam Pongki Paayuthae Naesarae! Neer Varumendra Osai Kaetkuthae Paasatthaal Naan Sogamatainthaen - Aa! Manaalanae! - Enru 6. Ellaiyillaa Makimai Veesum Thaesamae Sellavae Nee Aayatthamaa? O! Manaaliyae! Vallamaiyaay Yesuvotu Saernthu Aalavae - Enru