பாடல் #32665
நாம் நன்றியோடே
🔤 Naam Nanriyotae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் நன்றியோடே ஒன்று கூடிப் பாடுவோம் - மகிபனையே 1. அருணோதயம் போல் அவனியில் உதித்தார் அற்புதத் திருமறை யானவரே அருள் நிறைந்தவர், இருளதை நீக்கிடவே அன்பு மயமாகியே - நாம் 2. துதியால் மிகுந்த தூதர்கள் பாட புல்லணையமர்ந்த பொற்பாலகனை மகிலம் ஓங்கிடும் மன்னர்கள் தேடிடவே மகிமை துலங்கிட்டதே - நாம் 3. மனுவானவராய் மாண்புடையதிலே மறை புகழ் தீர்க்கர் உரை மாறிடாது. மாந்தர் மேல் பாசமாய் தாழ்மை உருவெடுத்தார் சாந்தமுள்ள காந்தனாம் - நாம் 4. சிறையாயிருந்த மாந்தரை யெடுக்க சகல நோய் பிணிகளும் நீக்கிடவே சிறுமையுற்றோருக்குச் சுவிசேஷமறிவித்திட சுதனவதரித்தனரே - நாம் 5. திரு ஆதரவாகத் திருப்பணி செய்ய திருச்சபை தினம் தினம் ஓங்கிடவே திங்கள் ஒளி போல் தங்கிடத் திரு வரங்கள் எங்கும் ஜொலித்திடவே - நாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Nanriyotae Onru Kootip Paatuvom - Makibanaiyae 1. Arunodhayam Pol Avaniyil Uthitthaar Arpudhath Thirumarai Yaanavarae Arul Niraindhavar, Irulathai Neekkidavae Anpu Mayamaakiyae - Naam 2. Thuthiyaal Mikundha Thoodharkal Paada Pullanaiyamarndha Porpaalakanai Makilam Ongkitum Mannarkal Thaetidavae Makimai Thulangkittathae - Naam 3. Manuvaanavaraay Maanputaiyathilae Marai Pugazh Theerkkar Urai Maaritaathu. Maandhar Mael Paasamaay Thaazhmai Uruvetutthaar Saandhamulla Kaandhanaam - Naam 4. Siraiyaayirundha Maandharai Yetukka Sakala Noy Pinigalum Neekkidavae Sirumaiyurrorukkuch Suvisaeshamarivitthida Sudhanavatharitthanarae - Naam 5. Thiru Aadharavaagath Thiruppani Seyya Thirucchapai Thinam Thinam Ongkidavae Thinggal Oli Pol Thangkidath Thiru Varanggal Engkum Jolitthidavae - Naam