பாடல் #32664
எங்கே எங்கே யான்
🔤 Engkae Engkae Yaan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கே, எங்கே யான் தேடுவேனோ! என் ஆத்தும நேசரை நான் - ஆ எங்கே தேடுவேனோ! 1. பூரண சொரூபனாம் புவியிலுதித்தவர் துஷ்டராலே விதைக்கப்பட்டார் உருவம் வாடி உடல் மாறியதால் முகத்தை மறைத்தேன் துரோகியே நான் எங்கே தேடுவேனோ! - எங்கே 2. அன்றோர் நாளிலே பாவப் பிணியினால் அன்பாமவரை மறந்திருந்தேன் அன்னை போலக் கண்டு எடுத்தார் என்ன இன்ப நேசரவர் எங்கே தேடுவேனோ! - எங்கே 3. அழகிற் சிறந்தவர், அன்புக்கேற்றவர் ஆத்துமாவுக் கினியவராம் அருகிலிருந்து ஆற்றும் துணைவர் அருமை இரட்சகர் இயேசுவல்லோ எங்கே தேடுவேனோ! - எங்கே 4. வாயின் வாசனை கமழும் இன்பமாய் வாக்கில் கபடோ காணாதோராம் வலிமை வாய்ந்த வல்ல சாதனம் வருவேன்னி யென்றுரைத்தவராம் எங்கே தேடுவேன்!" - எங்கே 5. கேளு, கேளு என் அரிய நண்பரே தேனினும் நேசரவர் தேசமெங்கும் கேட்டுமறியா தெய்வ சுதனாம், என் பிரியன் எங்கே தேடுவேனோ - எங்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkae, Engkae Yaan Thaetuvaeno! En Aatthuma Naesarai Naan - Aa Engkae Thaetuvaeno! 1. Poorana Soroobanaam Puviyiluthitthavar Thushtaraalae Vithaikkappattaar Uruvam Vaati Udal Maariyathaal Mugatthai Maraitthaen Thurokiyae Naan Engkae Thaetuvaeno! - Engkae 2. Anror Naalilae Paavap Piniyinaal Anpaamavarai Maranthirunthaen Annai Polak Kantu Etutthaar Enna Inba Naesaravar Engkae Thaetuvaeno! - Engkae 3. Azhakir Sirandhavar, Anpukkaertravar Aatthumaavuk Kiniyavaraam Arukilirunthu Aarrum Thunaivar Arumai Iratsakar Yesuvallo Engkae Thaetuvaeno! - Engkae 4. Vaayin Vaasanai Kamazhum Inbamaay Vaakkil Kapato Kaanaathoraam Valimai Vaayndha Valla Saadhanam Varuvaenni Yenruraitthavaraam Engkae Thaetuvaen!" - Engkae 5. Kaelu, Kaelu En Ariya Nanparae Thaeninum Naesaravar Thaesamengkum Kaettumariyaa Theyva Sudhanaam, En Piriyan Engkae Thaetuvaeno - Engkae