பாடல் #32644
தேவசுதனிவரோ
🔤 Thaevasudhanivaro
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவசுதனிவரோ - ஓ - ஓ - ஓ - இவர் அந்தக் கேடடைந்தார் அந்தோ ! கேடடைந்தவரோ - இவர் 1. மாசில்லா மேனி வாடுதே பாதகர் பரிகாசம் செய்யவும் பாடு சகித்தவரே மா பாவமாகவும் வாதை செய்தனரே - தேவ 2. யூதர்களால் துரோகமே மூர்க்கமாக செய்தனரோ! ஏன் சகித்தவரோ? பூலோகர்க்காகவே துன்பமிதேனோ - தேவ 3. நண்பர்களாலே நன்மையோ நன்றியை துதி செய்வாரில்லையோ? ஆ! பரிதாபம் ஆ! நானிலத்தில் ஏனிந்தக் கேடோ! - தேவ 4. தேவ சமூகம் போனதோ தேசமும் முழு சிருஷ்டியும் வெகுவாய் தவிக்கிறதே வேதாகமத்தில் மா பெரும் பொருளே - தேவ 5. அன்பின் சொரூபம் நையுதே ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் என் ஆத்துமாவுக்கு என்றும் நல்லவரே - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevasudhanivaro - O - O - O - Ivar Andhak Kaedatainthaar Antho ! Kaedataindhavaro - Ivar 1. Maasillaa Maeni Vaatuthae Paadhakar Parikaasam Seyyavum Paatu Sakitthavarae Maa Paavamaagavum Vaathai Seythanarae - Thaeva 2. Yoodharkalaal Thurogamae Moorkkamaaga Seythanaro! Aen Sakitthavaro? Poologarkkaagavae Thunbamithaeno - Thaeva 3. Nanparkalaalae Nanmaiyo Nanriyai Thuthi Seyvaarillaiyo? Aa! Parithaabam Aa! Naanilatthil Aenindhak Kaeto! - Thaeva 4. Thaeva Samoogam Ponatho Thaesamum Muzhu Sirushtiyum Vekuvaay Thavikkirathae Vaethaagamatthil Maa Perum Porulae - Thaeva 5. Anpin Soroobam Naiyuthae Aayiram Pathinaayiranggalil Sirandhavar En Aatthumaavukku Enrum Nallavarae - Thaeva