பாடல் #32633
உன்னதத் ததிபன்
🔤 Unnathath Thathiban
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத் ததிபன் உலகினில் உதித்தாரே உண்மையிதே அன்புதான் - புவியோர்மேல் 1. பாவத்தின் சவக்குழியில் அமிழ்ந்த மானிடர் மேலன்பிதோ மயக்கிய தென்னையும் மாபெரும் கிருபையே என் செய்வே னிவ்வன்பிற்கே - உன் 2. ஆருமற்றவனாய்ப் பாரினில் திரிந்தே காரிருளில் அலைந்தேன் தாரகை யெனவே தடுத்தது கிருபையே என்ன செய்வே னிவ்வன்பிற்கே - உன் 3. நோய் பிணி யாவும் நேயனே சுமந்தே நீர் பரிகாரியானீர் ஏழை யான் பெறவே ஈந்ததும் கிருபையே என் செய்வேன் வான்பிறைக்கே - உன் 4. லெளகீக மாய வலைதன்னில் வீழ்ந்ததே ஐயனே அழிந்திடாதே கல்வாரி காட்டியே காத்தது கிருபையே என் செய்வே னிவ்வன்பிற்கே - உன் 5. ஸ்தோத்திரம் தாவீது கோத்திரம் உமக்கே நேத்திரம் போல காத்தீரே தோத்திரம் பாடவே சேர்த்ததுன் கிருபையே என் செய்வே னிவ்வன்பிற்கே - உன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathath Thathiban Ulakinil Uthitthaarae Unmaiyithae Anputhaan - Puviyormael 1. Paavatthin Savakkuzhiyil Amizhndha Maanidar Maelanpitho Mayakkiya Thennaiyum Maaperum Kirupaiyae En Seyvae Nivvanpirkae - Un 2. Aarumartravanaayp Paarinil Thirinthae Kaarirulil Alainthaen Thaarakai Yenavae Thatutthathu Kirupaiyae Enna Seyvae Nivvanpirkae - Un 3. Noy Pini Yaavum Naeyanae Sumanthae Neer Parikaariyaaneer Aezhai Yaan Peravae Eendhathum Kirupaiyae En Seyvaen Vaanpiraikkae - Un 4. Lelakeega Maaya Valaidhannil Veezhndhathae Aiyanae Azhinthitaathae Kalvaari Kaattiyae Kaatthathu Kirupaiyae En Seyvae Nivvanpirkae - Un 5. Sthotthiram Thaaveethu Kotthiram Umakkae Naetthiram Pola Kaattheerae Thotthiram Paadavae Saertthathun Kirupaiyae En Seyvae Nivvanpirkae - Un