பாடல் #32617
ஏறெடுப்பேன் எந்தன்
🔤 Aeretuppaen Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏறெடுப்பேன் எந்தன் கண்களை - நேராய் எனக்கொத்தாசை வரும் பர்வதம் மேல் 1. வானம் பூமியும் படைத்த தேவன் வல்லமையின் சிறந்தவரே சொல்லிற்குரிய துன்பத்திலும் இன்பம் தந்து தேற்றி அணைப்பார் ஏன் பயமினி இவ்வுலகில் - ஏறி 2. உண்மை மாறா மகத்துவ தேவன் உயர் கன்மலை மேல் அடிகள் நிறுத்தி கண்ணின் மணிபோல் காப்பேனென்றார் கவலையேனினி கடந்து செல்வோம் கண் விழிப்புடன் கானம்பாடி - ஏறி 3. ஞானத்தில் சம்பூர்ண ராம் தம் ஜனத்தின் குறைவறிந்தவரே ஆபத்திலே தாங்குவார் ஆதரிப்பார் பெரிய பரனே கருணையின் கண் உடையவரே - ஏறி 4. உலகின் முடிவு வரையும் இருப்பார் உண்மையான தோழனவரே கண்ணுறங்கார் காப்பவரே அண்ணாமலையே தோத்தரிப்பேன் ஆசைக்கேற்ற நேசரவரே - ஏறி 5. பிதாவின் முன்னாசாரியனாய் நிற்கிறாய் ரென்றும் என் இயேசு வேண்டுதல்கள் செய்கிறார் ஏறெடுப்போம் மகிமையவர்க்கே என்றென்றும் நன்றியுடனே - ஏறி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aeretuppaen Endhan Kankalai - Naeraay Enakkotthaasai Varum Parvatham Mael 1. Vaanam Poomiyum Pataittha Devan Vallamaiyin Sirandhavarae Sollirkuriya Thunbatthilum Inbam Thanthu Thaerri Anaippaar Aen Payamini Ivvulakil - Aeri 2. Unmai Maaraa Makatthuva Devan Uyar Kanmalai Mael Atigal Nirutthi Kannin Manipol Kaappaenenraar Kavalaiyaenini Katanthu Selvom Kan Vizhippudan Kaanampaati - Aeri 3. Njaanatthil Sampoorna Raam Tham Janatthin Kuraivarindhavarae Aabatthilae Thaangkuvaar Aadharippaar Periya Paranae Karunaiyin Kan Utaiyavarae - Aeri 4. Ulakin Mutivu Varaiyum Iruppaar Unmaiyaana Thozhanavarae Kannurangkaar Kaappavarae Annaamalaiyae Thottharippaen Aasaikkaertra Naesaravarae - Aeri 5. Pithaavin Munnaasaariyanaay Nirkiraay Renrum En Yesu Vaentudhalkal Seykiraar Aeretuppom Makimaiyavarkkae Enrenrum Nanriyudanae - Aeri