பாடல் #32616
பரிசுத்தர் பரிசுத்தரே
🔤 Parisutthar Parisuttharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் பரிசுத்தரே - பரனே இயேசு கிறிஸ்துவே ஜீவாதிபதியே பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தமில்லாமல் பராபரனே உமைத் தரிசிக்கமாட்டர் ஓர் போதும் ஒருவரும் - பரி 1. கிருபாசனப்பதியே திருவருள் தனை ஈந்தெமைத் தேற்றியே காத்திடும் கிருபையினாலடியார் உம்மை நிலைத்திட கேதமில்லாத நின் தாழ்மையை ஈந்திடும் 2. பரிசுத்தர் பரிசுத்தர் - நீர் பரிசுத்தரே யென சேராபீன் பாடிடும் மகிமையால் நிறைந்த இப்பரிசுத்தமாமிதை மானிடர் மெமக்கீந்திட விரும்பிய - பரி 3. பாடுகள் சகிப்பதினால் பரலோகத்தில் சேர நம் பாதையைத் திறந்தீர் பரிசுத்த அலங்கார நூல் வஸ்திரம் பாடுகள் சகித்து நாம் அணிந்திட விரும்பிய 4. சமாதான காரணர் - நம்மில் ஆவியை ஊற்றியே சமாதான மின்திட்ட சமாதான நிறைவினால் பரிசுத்தராகிய கறைதிரையில்லா மணவாட்டியை விரும்பிய - பரி 5. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - துாய ரூபம் நாமணிய எம் சாயல் நீர் ஏற்றத்தால் ஸ்தோத்திர பாத்திரனே அதிகாலையில் தூய உம் சமூகத்தில் நான் மகிழ்ந்திடுவேன் - பரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Parisuttharae - Paranae Yesu Kiristhuvae Jeevaathibathiyae Parisutthar Parisuttharae Parisutthamillaamal Paraabaranae Umaith Tharisikkamaattar Or Pothum Oruvarum - Pari 1. Kirupaasanappathiyae Thiruvarul Thanai Eenthemaith Thaerriyae Kaatthitum Kirupaiyinaalatiyaar Ummai Nilaitthida Kaedhamillaadha Nin Thaazhmaiyai Eenthitum 2. Parisutthar Parisutthar - Neer Parisuttharae Yena Saeraapeen Paatitum Makimaiyaal Niraindha Ipparisutthamaamithai Maanidar Memakkeenthida Virumpiya - Pari 3. Paatugal Sakippathinaal Paralogatthil Saera Nam Paathaiyaith Thirantheer Parisuttha Alangkaara Nool Vasthiram Paatugal Sakitthu Naam Aninthida Virumpiya 4. Samaathaana Kaaranar - Nammil Aaviyai Oorriyae Samaathaana Minthitta Samaathaana Niraivinaal Parisuttharaakiya Karaithiraiyillaa Manavaattiyai Virumpiya - Pari 5. Sthotthiram Sthotthiram - Thuாya Roobam Naamaniya Em Saayal Neer Aertratthaal Sthotthira Paatthiranae Athikaalaiyil Thooya Um Samoogatthil Naan Makizhnthituvaen - Pari