பாடல் #32613
தூதர்கள் பாடுவதேனோ
🔤 Thoodharkal Paatuvathaeno
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூதர்கள் பாடுவதேனோ! - இந்த வேளையில் நாதங்கள் ஏனோ! தேவ புவியெங்கும் மகிமை காட்சிதரும் மாட்சிமை யாமிது வானோர்க்கும் இனிமை - துதி 1. பூமியிலே சமாதானம் - இந்த புல்லரின் மீதினில் பிரியம் - என்றும் உதித்தனன் இன்றும் புதியதோர் பாலன் ஜெனித்தார் தீர்த்திட தேசத்தின் சாபம் - தூத 2. கந்தை துணியில் தூங்கும் - மாட்டு மந்தையின் மத்தியில் தங்கும் - சுதன் சுந்தரப் பாலன் ஏங்குவதேனோ! விந்தையாம் இவர்க்கிந்தப் பாடுகள் ஏனோ! - தூத 3. உலகத்தின் மீட்பருக்கிடமோ - குடில் வல்ல தேவனுக்கிது தகுமோ - இந்த சொல்லுதற்கரிய அன்பிது வலித்தே பொல்லாங்கராம் நம்மில் அன்பு தான் பெரிதே - தூத 4. அடிமையின் ரூபமிதேனோ! - எமை ஆட்கொள்ள வந்த தாலோ - இந்த படிமிசை எவரும் பகர்தற்கரிதான பாதக ரா மெமக் காயிந்தப்பாடோ - தூத 5. அதிசயமானவர் தானே - எமக்கு காலோசனைக் கர்த்தரே - இவர் வல்லமை தேவனே புல்லணை மீதிலே சொல்லரும் சமாதானம் வந்தாரோ - தூத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoodharkal Paatuvathaeno! - Indha Vaelaiyil Naadhanggal Aeno! Thaeva Puviyengkum Makimai Kaatsidharum Maatsimai Yaamithu Vaanorkkum Inimai - Thuthi 1. Poomiyilae Samaathaanam - Indha Pullarin Meethinil Piriyam - Enrum Uthitthanan Inrum Puthiyathor Paalan Jenitthaar Theertthida Thaesatthin Saabam - Thoodha 2. Kanthai Thuniyil Thoongkum - Maattu Manthaiyin Matthiyil Thangkum - Sudhan Sundharap Paalan Aengkuvathaeno! Vinthaiyaam Ivarkkindhap Paatugal Aeno! - Thoodha 3. Ulakatthin Meetparukkidamo - Kutil Valla Devanukkithu Thakumo - Indha Solludharkariya Anpithu Valitthae Pollaanggaraam Nammil Anpu Thaan Perithae - Thoodha 4. Atimaiyin Roobamithaeno! - Emai Aatkolla Vandha Thaalo - Indha Patimisai Evarum Pakartharkarithaana Paadhaka Raa Memak Kaayindhappaato - Thoodha 5. Athisayamaanavar Thaanae - Emakku Kaalosanaik Karttharae - Ivar Vallamai Devanae Pullanai Meethilae Sollarum Samaathaanam Vanthaaro - Thoodha