பாடல் #32611
ஜீவ ஞான இயேசு
🔤 Jeeva Njaana Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ ஞான இயேசு நாதரின் சேவடி பணிவோமே நாம் ஜீவனை ஈந்த ஜீவாதிபதியே ஜீவிய நாளெல்லாம் பணிவுடனே நாம் - ஜீவ 1. வெள்ளம் போல வந்திட்ட அலையை விலக்கியே மீட்டீரே உள்ளம் போல் நேசித்தார் எமை குளம் நிறைந்த இப்பார்தல் மீதில் - ஜீவ 2. போஷிக்கும் கரம் ஆசிக்கும் கரம் புனிதா நீர் ஈந்திடும் - ஆ ஆ நேசிக்கும் எம்மில் உம் ஆனந்த மாரியை பாசமா யித்தினம் தந்து அளித்திடும் - ஜீவ 3. காதலனே நானிலம் தனிலேயும் தாசர்கள் ஓங்கிடவே - ஆ ஆ ஆர்வலன் உன் நன்மைகள் ஈந்து சீர்பாலனம் செய்திடுவாய் எம்மில் - ஜீவ 4. திங்களொளியே மங்கிடா மதியே தினமுமைத் துதித்திடவே- ஆ ஆ பங்கமில்லா உம் பாதத்தைத் தேட பாதகர் எமையே பரிசுத்தம் செய்தீர் - ஜீவ 5. காத்திராத தினமதில் நீரே கர்த்தரே வருவீரே - ஆ ஆ ஆவி ஆத்மா எம் மாமிச முற்றும் மாசற்றது மகிமையில் சேர்க்க - ஜீவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Njaana Yesu Naadharin Saevati Panivomae Naam Jeevanai Eendha Jeevaathibathiyae Jeeviya Naalellaam Panivudanae Naam - Jeeva 1. Vellam Pola Vanthitta Alaiyai Vilakkiyae Meetteerae Ullam Pol Naesitthaar Emai Kulam Niraindha Ippaarthal Meethil - Jeeva 2. Poshikkum Karam Aasikkum Karam Punithaa Neer Eenthitum - Aa Aa Naesikkum Emmil Um Aanandha Maariyai Paasamaa Yitthinam Thanthu Alitthitum - Jeeva 3. Kaadhalanae Naanilam Thanilaeyum Thaasarkal Ongkidavae - Aa Aa Aarvalan Un Nanmaigal Eenthu Seerpaalanam Seythituvaay Emmil - Jeeva 4. Thinggaloliyae Mangkitaa Mathiyae Thinamumaith Thuthitthidavae- Aa Aa Panggamillaa Um Paadhatthaith Thaeda Paadhakar Emaiyae Parisuttham Seytheer - Jeeva 5. Kaatthiraadha Thinamathil Neerae Karttharae Varuveerae - Aa Aa Aavi Aathmaa Em Maamisa Murrum Maasartrathu Makimaiyil Saerkka - Jeeva