பாடல் #32604
இயேசு பரனை எங்களின்
🔤 Yesu Paranai Enggalin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பரனை எங்களின் ராஜணை ஏற்றி போற்றியே வாழ்த்திடுவோம் இகபர சுகம் ஏழைகளுக்கு இலவசமாக அவதரித்தாரே - இயேசு 1. காசினியில் கரிசனையாய் வந்து கஷ்டத்தை சகித்தார் கர்த்தர் தாமே பாசமாக பாடுவோம் நாமே மேசியாவின் நாமத்தையே - இயேசு 2. மாண்டுபோன மாந்தரை மீட்க மகிலம் வந்து நம் மகிபனையே மாசில்லாமல் ஆசையோடு நேரில் நாம் மகிழ்ந்திடவே - இயேசு 3. மரண பயத்தால் நடுங்கின நம்மை மகிமையால் நிறுத்தும் மகிழச் செய்தார் சேவையே புரிவோம் இயேசுவின் நாமம் சிறந்து இலங்கிச் செழித்திடவே - இயேசு 4. தாசரை போல தாழ்மையை அணிந்து நேசரை நேயம் பின்பற்றுவோம் வேஷத்தை ஒழித்து வேதனையில் நிலைத்து வேதாளம் நடுங்கவே ஜெயித்திடுவோம் - இயேசு 5. தாவி வரும் பாவி ஒருபோதும் தள்ளாத ரட்சகன் ஜீவிப்பதால் தாமுதறேனோ பாவியே வாராய் தயாபரனண்டை சேர்ந்திடவே - இயேசு 6. மேக மீதினில் மேசியா வருவார் வேகமாய் நன்மை சேர்த்திடவே வேறு ரூபமாய் மாறுவோம் நாமே மேலோகத்திலென்றும் ஜீவிக்கவே - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Paranai Enggalin Raajanai Aerri Porriyae Vaazhtthituvom Igapara Sugam Aezhaigalukku Ilavasamaaga Avatharitthaarae - Yesu 1. Kaasiniyil Karisanaiyaay Vanthu Kashtatthai Sakitthaar Kartthar Thaamae Paasamaaga Paatuvom Naamae Maesiyaavin Naamatthaiyae - Yesu 2. Maantupona Maandharai Meetka Makilam Vanthu Nam Makibanaiyae Maasillaamal Aasaiyotu Naeril Naam Makizhnthidavae - Yesu 3. Marana Payatthaal Natungkina Nammai Makimaiyaal Nirutthum Makizhach Seythaar Saevaiyae Purivom Yesuvin Naamam Siranthu Ilangkich Sezhitthidavae - Yesu 4. Thaasarai Pola Thaazhmaiyai Aninthu Naesarai Naeyam Pinbarruvom Vaeshatthai Ozhitthu Vaedhanaiyil Nilaitthu Vaethaalam Natunggavae Jeyitthituvom - Yesu 5. Thaavi Varum Paavi Orupothum Thallaadha Ratsakan Jeevippathaal Thaamudharaeno Paaviyae Vaaraay Thayaabaranantai Saernthidavae - Yesu 6. Maega Meethinil Maesiyaa Varuvaar Vaegamaay Nanmai Saertthidavae Vaeru Roobamaay Maaruvom Naamae Maelogatthilenrum Jeevikkavae - Yesu