பாடல் #3258
பாடல்பாடி மகிழ்வேனே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா! பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா! பாரில் வந்தாரே, தந்தாரே, அன்பால் மீட்டாரே பரிசுத்தரை நித்தியரை பாடி போற்றுவேன் அல்லேலூயா பாடுவேன் நான் - 4 மகிமையின் இராஜா அவர், மகத்துவம் நிறைந்தவர் மனமெல்லாம் நிறையுதே, மகிழ்ச்சியில் சிலிர்க்குதே கனிவான மேய்ப்பனவர், கண்மணிபோல் காப்பாரவர் கீதங்களால் ஆராதிப்பேன், ஐக்கியத்தில் ஆனந்திப்பேன் நீதியுள்ள நீதிபரர், மேகமீதில் வந்திடுவார் நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்,