பாடல் #32577
தான்தானாக நிற்கச் சகல
🔤 Thaanthaanaaga Nirkach Sakala
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தான்தானாக நிற்கச் சகலந் தன்னாலே நிற்கச் சச்சிதானந்த வெளியினித்திய மகத்துவமாக 1.நான்தா னென்றுரைக்க நானுமில்லை நீயுமில்லை நாமமில்லை ரூபமில்லை நச்சடங்க ளொன்றுமில்லை 2. ஏன்தான் தற்கமதம் வீண் சாத்திரப்பிரட்டல் ஏட்டையுங் கிழித்தெறிந்து போட்டெரி வளர்த்துப் போட்டு 3. தானவன்றானதாகச் சருவ வியாபியாகத் தற்சுய சொரூபமாக அர்ச்சயத் தரூபமாக 4. தானவனாக நிற்கத் தானே தானாகநிற்கத் தன்னிலே தானாக நிற்கத் தனக்குந் தானாகநிற்க 5. வன்மையின் வளங்களோங்கித் துன்மையும் புன்மையுமின்றி நன்மையுந் தயவுமிக்க உண்மையிலுண்மையுமாக 6. ஞானமு மளவில்லாத மானமு மொரேயொரு நி தானமுமுடையதாக வீனமுங் குறையுமின்றி 7. அண்டமு மகண்ட பகிரண்டமுங் கடந்துபர மண்டலங்களுங் கொளாதோர் கண்டசீர தாயெந்நாளும் 8. துத்திய குணங்களெட்டின் பத்திலட்சணங்களுள்ள சத்திய பரிசுத்ததி னித்திய வஸ்துவதாக 9. பேதமில்லையே யைம்பூதமில்லையே யொரு தீதுமில்லையே செகச்சூதுமில்லை வாதுமில்லை 10. ஊருமில்லையே சொல்லப் பேருமில்லையே யொப் பாருமில்லையே யெதிர்த்தாருமில்லைப் போருமில்லை 11. அங்கமில்லையே யவசங்கமில்லையே துற்க ளங்கமில்லையே சற்றும் பங்கமில்லை லிங்கமில்லை 12. அரியரன் றானுமல்ல அயனுமற்றாரு மல்ல ஆணுமல்லப் பெண்ணுமல்ல அப்புறத்திலேதுமல்ல 13. பஞ்சந்திரியங்களன்றிப் பஞ்சாட்சரங்களன்றி பஞ்சவன்னம் பஞ்சபூதம் பஞ்சகத்தாக்களுமன்றி 14. வேதச் சமயந்தேட வேதாந்த கீதம்பாட வேதாட்சரங்கணீட வேதநாயகன் கொண்டாட 15. தானவன் தானதாக சருவ வியாபியாக தற் சுயச் சொரூபமாக அர்சயத்தரூபமாக தான் அவனாக நிற்க தானே தானாக நிற்க தன்னிலே தானாக நிற்கத் தனக்கு தானாக நிற்க 16. ஏன்தான் தற்க மதம் வீண் சாஸ்திரப் பிரட்டல் ஏட்டையுங் கிழித்தெரிந்து போட்டெரிவளர்த்துப் போட்டு நன்மையின் வளங்களோங்கி துன்மையும் புன்மையுமின்றி நன்மையும் தயவுமிக்க உண்மையில் உண்மையுமாக 17. வேதமில்லை ஐம் பூதமில்லையே ஒரு தீதுமில்லையே ஜெக சூதுமில்லை வாதுமில்லை ஊருமில்லை சொல்லப் பேருமில்லையே - யொப் பாருமில்லையே யெதிர்தாருமில்லை போருமில்லை 18. துத்திய குணங்கள் எட்டின் பத்து லட்சணங்களுக்கு சத்திய பரிசுத்ததி நித்திய வஸ்துவதாக வேதச் சமயம் வேதாந்த கீதம் பாட வேதாசரண்கள் நீட வேதநாயகன் கொண்டாடதான் தான் 19. புகழ்மிக்க எட்டு குணங்களும் பத்து இலட்சணங்களும் உடைய சத்திய பரிசுத்த நித்திய தெய்வமே அனைத்து சமய கீதங்களும் நூல்களும் போற்றும் வேதத்தின் நாயகன் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaanthaanaaga Nirkach Sakalan Thannaalae Nirkach Sachsithaanandha Veliyinitthiya Makatthuvamaaga 1.naanthaa Nenruraikka Naanumillai Neeyumillai Naamamillai Roobamillai Nacchatangga Lonrumillai 2. Aenthaan Tharkamatham Veen Saatthirappirattal Aettaiyung Kizhittherinthu Potteri Valartthup Pottu 3. Thaanavanraanathaagach Saruva Viyaapiyaagath Tharsuya Soroobamaaga Arcchayath Tharoobamaaga 4. Thaanavanaaga Nirkath Thaanae Thaanaaganirkath Thannilae Thaanaaga Nirkath Thanakkun Thaanaaganirka 5. Vanmaiyin Valanggalongkith Thunmaiyum Punmaiyuminri Nanmaiyun Thayavumikka Unmaiyilunmaiyumaaga 6. Njaanamu Malavillaadha Maanamu Moraeyoru Ni Thaanamumutaiyathaaga Veenamung Kuraiyuminri 7. Andamu Makanda Pakirandamung Katanthubara Mandalanggalung Kolaathor Kandaseera Thaayennaalum 8. Thutthiya Kunanggalettin Patthilatsananggalulla Satthiya Parisutthathi Nitthiya Vasthuvathaaga 9. Paedhamillaiyae Yaimpoodhamillaiyae Yoru Theethumillaiyae Segachsoothumillai Vaathumillai 10. Oorumillaiyae Sollap Paerumillaiyae Yop Paarumillaiyae Yethirtthaarumillaip Porumillai 11. Anggamillaiyae Yavasanggamillaiyae Thurka Langgamillaiyae Sarrum Panggamillai Linggamillai 12. Ariyaran Raanumalla Ayanumarraaru Malla Aanumallap Pennumalla Appuratthilaethumalla 13. Panjjanthiriyanggalanrip Panjsaatsaranggalanri Panjjavannam Panjjapoodham Panjjakatthaakkalumanri 14. Vaedhach Samayanthaeda Vaethaandha Keedhampaada Vaethaatsarangganeeda Vaedhanaayakan Kontaada 15. Thaanavan Thaanathaaga Saruva Viyaapiyaaga Thar Suyach Soroobamaaga Arsayattharoobamaaga Thaan Avanaaga Nirka Thaanae Thaanaaga Nirka Thannilae Thaanaaga Nirkath Thanakku Thaanaaga Nirka 16. Aenthaan Tharka Matham Veen Saasthirap Pirattal Aettaiyung Kizhittherinthu Potterivalartthup Pottu Nanmaiyin Valanggalongki Thunmaiyum Punmaiyuminri Nanmaiyum Thayavumikka Unmaiyil Unmaiyumaaga 17. Vaedhamillai Aim Poodhamillaiyae Oru Theethumillaiyae Jega Soothumillai Vaathumillai Oorumillai Sollap Paerumillaiyae - Yop Paarumillaiyae Yethirthaarumillai Porumillai 18. Thutthiya Kunanggal Ettin Patthu Latsananggalukku Satthiya Parisutthathi Nitthiya Vasthuvathaaga Vaedhach Samayam Vaethaandha Keedham Paada Vaethaasarankal Needa Vaedhanaayakan Kontaadathaan Thaan 19. Pugazhmikka Ettu Kunanggalum Patthu Ilatsananggalum Utaiya Satthiya Parisuttha Nitthiya Theyvamae Anaitthu Samaya Keedhanggalum Noolkalum Porrum Vaedhatthin Naayakan Neerae