பாடல் #32571
கருப்பு என்றாலும்
🔤 Karuppu Enraalum
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருப்பு என்றாலும்
சிவப்பு என்றாலும்
பேதம் பாராத தேவன்
உயரம் பெரிதா உயரம் சிறிதா
பிரித்துப் பாராத தேவன்
நம் உள்ளத்தைத் தானே தேவன் பார்க்கிறார் - அதில்
நல்லதைத் தானே ஒன்று சேர்க்கிறார் (கருப்பு)
1. உன் நாவில் சொற்கள் பிறக்கும் முன்னரே
நம் கர்த்தர் உன்னை அறிந்திருக்கிறார் (2)
உன் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னரே (2)
பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு ஒருவரே (2) (கருப்பு)
2. தம் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறார்
உன் தாய் மறந்தாலும் அவர் மறப்பதில்லையே (2)
உன் கண்ணில் நீர் என்றால் கண் இமைக்கும் நேரத்தில் (2)
தன் மகனை (மகளை) தேடியே
ஓடி வருபவர் (2) (கருப்பு)
3. நீ ஏழை என்றால் உன்னை வாழ்வில் உயத்துவார்
நீ கோழை என்றால் பெலன் தந்து உதவுவார் (2)
நீங்களே தேவனின் ஆலயமாய் இருக்கிறீர் (2)
உங்களில் ஆவியானவர் வாசமாய் இருக்கிறார் (2)
(கருப்பு)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karuppu Enraalum
Sivappu Enraalum
Paedham Paaraadha Devan
Uyaram Perithaa Uyaram Sirithaa
Piritthup Paaraadha Devan
Nam Ullatthaith Thaanae Devan Paarkkiraar - Athil
Nallathaith Thaanae Onru Saerkkiraar (karuppu)
1. Un Naavil Sorkal Pirakkum Munnarae
Nam Kartthar Unnai Arinthirukkiraar (2)
Un Thaayin Karppatthil Uruvaakum Munnarae (2)
Peyar Solli Azhaitthavar Yesu Oruvarae (2) (karuppu)
2. Tham Ullangkaiyil Unnai Varainthirukkiraar
Un Thaay Maranthaalum Avar Marappathillaiyae (2)
Un Kannil Neer Enraal Kan Imaikkum Naeratthil (2)
Than Makanai (makalai) Thaetiyae
Oti Varubavar (2) (karuppu)
3. Nee Aezhai Enraal Unnai Vaazhvil Uyatthuvaar
Nee Kozhai Enraal Pelan Thanthu Udhavuvaar (2)
Neenggalae Devanin Aalayamaay Irukkireer (2)
Unggalil Aaviyaanavar Vaasamaay Irukkiraar (2)
(karuppu)