பாடல் #32565
நாசியிலே சுவாசமுள்ள
🔤 Naasiyilae Suvaasamulla
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாசியிலே சுவாசமுள்ள நரனே - உன்னை நம்புவதில் யாருக்கென்ன பலன் வெட்டுப்பட்டு விழுந்தாலும் தண்ணீர் பட்டு துளிர்க்குமென்று மரத்தையும் நம்பலாம் - அது வளருமென்று சொல்லலாம் மரம் போல வளர்ந்த உன்னை எத்தனைக் காலம் நம்பலாம் 1. காலி பானை உடலுறவும் நாள் உடையும்-உன் வயதும் கூலிக்காரன் வருஷம் போல கழியும் வேலி தாண்டி மேய்கின்ற காளைகள் இங்கே அதிகம் - உன் வாலிபத்தின் மிடுக்கும் முடுக்கும் எத்தனை காலம் நிலைக்கும் 2. அச்சம் வந்தால் அழகு முகம் வெளுக்கும் - மனதில் எரிச்சல் வந்தால் மனிதன் முகம் கருக்கும் உலகமெல்லாம் உந்தன் கையில் கிடைத்தும் - உன் ஆத்துமாவை இழந்து விட்டால் எத்தனை லாபம் கிடைக்கும் 3. சிறகொடிந்த பறவை எப்படி பறக்கும் - உந்தன் மனமுடைந்தார் இரவில் ஏது உறக்கம் இயேசு உன்னில் வந்தால் வாழ்வு செழிக்கும் - வேத வசனத்திலே நிலைத்திருந்தால் நித்திய மகிழ்ச்சி கிடைக்கும் - நாசி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naasiyilae Suvaasamulla Naranae - Unnai Nampuvathil Yaarukkenna Palan Vettuppattu Vizhunthaalum Thanneer Pattu Thulirkkumenru Maratthaiyum Nambalaam - Athu Valarumenru Sollalaam Maram Pola Valarndha Unnai Etthanaik Kaalam Nambalaam 1. Kaali Paanai Udaluravum Naal Utaiyum-un Vayathum Koolikkaaran Varusham Pola Kazhiyum Vaeli Thaanti Maeykindra Kaalaigal Ingkae Athigam - Un Vaalibatthin Mitukkum Mutukkum Etthanai Kaalam Nilaikkum 2. Accham Vanthaal Azhaku Mugam Velukkum - Manathil Ericchal Vanthaal Manidhan Mugam Karukkum Ulakamellaam Undhan Kaiyil Kitaitthum - Un Aatthumaavai Izhanthu Vittaal Etthanai Laabam Kitaikkum 3. Sirakotindha Paravai Eppati Parakkum - Undhan Manamutainthaar Iravil Aethu Urakkam Yesu Unnil Vanthaal Vaazhvu Sezhikkum - Vaedha Vasanatthilae Nilaitthirunthaal Nitthiya Makizhchsi Kitaikkum - Naasi