பாடல் #32563
கடன் கொடுப்போம்
🔤 Katan Kotuppom
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடன் கொடுப்போம் - கர்த்தருக்கே கடன் கொடுப்போம் ஏழைகளுக்கு இரங்கிய - நிதம் இயேசுவுக்கே கடன் கொடுப்போம் 1. போதுமென்ற மனமிருந்தால் மிகுந்த லாபம் பெற்றிடலாம் தேவ பக்தி உடனிருந்தார் ஆசீர்வாதம் அடைந்திடலாம் பேராசை பெரு நஷ்டம் உணர்ந்தவரில்லை கஷ்டம் ஐஸ்வர்ய மயக்கம் நம்மை மதிகேட்டில் தள்ளியழிக்கும் - கடன் 2. இயேசு எந்தன் ஜீவன் என்றால் சாவு கூட லாபமன்றோ ஞானம் தரும் ஆதாயம் பசும்பொன்னை விட உத்தம மன்றோ பொல்லாத பொருளாசை சேதமாக்கும் மாம்ச இச்சை வேதனைகள் உருவகுத்தும் தீமைக்கெல்லாம் வேராகும் - கடன் 3. அகிலத்தை ஆண்டு அதையும் ஆதாயமாக்கிடலாம் ஜீவன் நஷ்டமடைந்தால் மனிதனுக்கு அதில் லாபமென்ன ஐஸ்வர்ய சம்பத்து எல்லாம் எவன் பெற அவர் சித்தம் அவன் பங்கில் மகிழ்ந்திடவே அதிகாரம் அவர் தருவார் - கடன் 4. கடன் தொல்லை தீர்ப்பது தான் கர்த்தரின் வேலையே பாவ கடன் தீர்த்த பின்னே உலகம் நமக்கு பெருந்தொல்லையோ - கடன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katan Kotuppom - Karttharukkae Katan Kotuppom Aezhaigalukku Irangkiya - Nidham Yesuvukkae Katan Kotuppom 1. Pothumendra Manamirunthaal Mikundha Laabam Perridalaam Thaeva Pakthi Udanirunthaar Aaseervaadham Atainthidalaam Paeraasai Peru Nashtam Unarndhavarillai Kashtam Aisvarya Mayakkam Nammai Mathikaettil Thalliyazhikkum - Katan 2. Yesu Endhan Jeevan Enraal Saavu Kooda Laabamanro Njaanam Tharum Aathaayam Pasumponnai Vida Utthama Manro Pollaadha Porulaasai Saedhamaakkum Maamsa Ichsai Vaedhanaigal Uruvakutthum Theemaikkellaam Vaeraakum - Katan 3. Akilatthai Aantu Athaiyum Aathaayamaakkidalaam Jeevan Nashtamatainthaal Manidhanukku Athil Laabamenna Aisvarya Sambatthu Ellaam Evan Pera Avar Sittham Avan Pangkil Makizhnthidavae Athikaaram Avar Tharuvaar - Katan 4. Katan Thollai Theerppathu Thaan Karttharin Vaelaiyae Paava Katan Theerttha Pinnae Ulakam Namakku Perunthollaiyo - Katan