பாடல் #32561
சலனம் கொண்ட மனதில்
🔤 Salanam Konda Manathil
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சலனம் கொண்ட மனதில் சஞ்சலங்கள் வருவது நிஜமா வசனம் நிலைத்திருக்கும் மனதில் சந்தோஷம் மலர்வதும் நிஜமே 1. கிறிஸ்துவின் சிந்தை அணிந்ததால் கவலைகள் என் மேல் படர்வதில்லை உலக சிந்தையால் தேவ பகைஞனாய் மாறினால் வியப்பு ஏதுமில்லை - எனை மயக்கும் உலகிலே மயங்கிடாமலே வலக்கர நிழலில் தங்கிடுவேன் 2. கிறிஸ்துவின் கரம் என்னை தாங்குவதால் துயரக்கடலில் நான் வீழ்வதில்லை இதய நினைவுகள் அறிந்த ஆண்டவர் என்றும் என்னைக் கைவிடுவதில்லை - என் வாழ்வு தாழ்விலும் வாடும் வெயிலிலும் ஆண்டவர் மர நிழல் மறைவதில்லை 3. கிறிஸ்துவின் அன்பென்னை நெருக்குவதால் உலகம் என்னை நெருங்கி வருவதில்லை சிலுவை சுமப்பதால் பாடு சகிப்பதால் சோதனை நேரத்தில் சேர்வதில்லை - என்றும் உமது கரத்தினால் நன்மை பெறுவதால் தீமை என்னை என்றும் தொடர்வதில்லை 4. கிறிஸ்துவின் கிருபை க்குள் வாழ்வதனால் தீயவர் என்னை தேடுவதில்லை நன்மை கிருபைகள் தொடர் செய்திடும் தேவ அன்பு என்றும் குறைவதில்லை - அந்த இறுதி நாள் வரை இயேசு ஆண்டவர் கரங்களை நான் என்றும் விடுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Salanam Konda Manathil Sanjjalanggal Varuvathu Nijamaa Vasanam Nilaitthirukkum Manathil Santhosham Malarvathum Nijamae 1. Kiristhuvin Sinthai Anindhathaal Kavalaigal En Mael Patarvathillai Ulaka Sinthaiyaal Thaeva Pakainjanaay Maarinaal Viyappu Aethumillai - Enai Mayakkum Ulakilae Mayangkitaamalae Valakkara Nizhalil Thangkituvaen 2. Kiristhuvin Karam Ennai Thaangkuvathaal Thuyarakkatalil Naan Veezhvathillai Idhaya Ninaivugal Arindha Aandavar Enrum Ennaik Kaivituvathillai - En Vaazhvu Thaazhvilum Vaatum Veyililum Aandavar Mara Nizhal Maraivathillai 3. Kiristhuvin Anpennai Nerukkuvathaal Ulakam Ennai Nerungki Varuvathillai Siluvai Sumappathaal Paatu Sakippathaal Sodhanai Naeratthil Saervathillai - Enrum Umathu Karatthinaal Nanmai Peruvathaal Theemai Ennai Enrum Thodarvathillai 4. Kiristhuvin Kirupai Kkul Vaazhvathanaal Theeyavar Ennai Thaetuvathillai Nanmai Kirupaigal Thodar Seythitum Thaeva Anpu Enrum Kuraivathillai - Andha Iruthi Naal Varai Yesu Aandavar Karanggalai Naan Enrum Vituvathillai