பாடல் #32556
விளக்கில்லாமலே வெளிச்சம்
🔤 Vilakkillaamalae Veliccham
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விளக்கில்லாமலே வெளிச்சம் தேடிடும் விட்டில் பூச்சிகள் இரவு தாண்டாமல் விடியல் தேடிடும் சின்ன சின்ன சூரியன்கள்.. வேத வசனம் விளங்காமல் - அத் ஆழம் அறியாமல் ஆகாய சிலம்பம் ஆடும் மனிதர்கள் 1. விழிகள் இல்லாமல் தினம் தினம் தரிசனம் காண துடிக்கும் கண்கள் - வேத வார்த்தைக்கு வெளியில் வாழ்வைத் தொலைத்துவிட்டு வானம் பார்க்கும் உள்ளங்கள் உழைத்திடாமலே ஊதியம் பெற துடித்திடும் நெஞ்சங்கள் - இந்த உண்மை உணராமல் உரத்து கூச்சலிட்டு ஒளிந்திடும் நகரங்கள் 2. வேதம் நமக்கு வந்த வழிகள் அறியாமல் விளக்கமளிக்கும் சித்தர்கள் - அதை நமக்கு தந்தவர் செய்த தியாகம் அறியாமல் உருட்டி புரட்டும் எத்தர்கள் - தூய ஆவி பெயராலே ஆட்டம் போட்டு - கீழே விழுந்து புரளும் மனுடர் - ஒரு நாளில் இரகசியம் வெளிவரும் - அடைய பாவம் இந்த மனிதர் மனக்கண் திறந்திடும் வெளிச்சம் வீசிடும் காலம் வர வேணுமே - பல பாதங்கள் மாறும் தீமைகள் ஓடும் நாட்கள் மலரனும் மனையாட்டி சபையாக - மணவாளன் முகம் காணவே கறை திறை நீங்கி திருச்சபை ஜொலிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilakkillaamalae Veliccham Thaetitum Vittil Poochsigal Iravu Thaantaamal Vitiyal Thaetitum Sinna Sinna Sooriyankal.. Vaedha Vasanam Vilangkaamal - Ath Aazham Ariyaamal Aakaaya Silambam Aatum Manidharkal 1. Vizhigal Illaamal Thinam Thinam Tharisanam Kaana Thutikkum Kankal - Vaedha Vaartthaikku Veliyil Vaazhvaith Tholaitthuvittu Vaanam Paarkkum Ullanggal Uzhaitthitaamalae Oothiyam Pera Thutitthitum Nenjjanggal - Indha Unmai Unaraamal Uratthu Koocchalittu Olinthitum Nakaranggal 2. Vaedham Namakku Vandha Vazhigal Ariyaamal Vilakkamalikkum Sittharkal - Athai Namakku Thandhavar Seytha Thiyaagam Ariyaamal Urutti Purattum Ettharkal - Thooya Aavi Peyaraalae Aattam Pottu - Keezhae Vizhunthu Puralum Manudar - Oru Naalil Irakasiyam Velivarum - Ataiya Paavam Indha Manidhar Manakkan Thiranthitum Veliccham Veesitum Kaalam Vara Vaenumae - Pala Paadhanggal Maarum Theemaigal Otum Naatkal Malaranum Manaiyaatti Sapaiyaaga - Manavaalan Mugam Kaanavae Karai Thirai Neengki Thirucchapai Jolikkum