பாடல் #32555
என் மனசுக்குள்ள சில
🔤 En Manasukkulla Sila
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மனசுக்குள்ள சில ஆசைகள் - என் இதய வீணை எழுப்புகின்ற ஓசைகள் நான் நடந்து வந்த பாதையில் என்னை நேசித்த இறைவா மலர் இதழ் மேலே பனித்துளி போல் அன்பு வைத்தவரே 1. காலை நேர பனியில் காலாற நடந்து செல்ல ஆசை மனசுக்குள் ஆசை ஏதேன் தோட்டத்திலே என் இயேசுவின் கரம் கோர்த்து நடந்து செல்ல ஆசை - என் மனசு 2. சீனாய் மலை கொடுமுடியில் மோசே போல் அமர்ந்து ஜெபிக்க ஆசை மனசுக்குள் ஆசை தேவன் எடுத்து தந்த அந்த பலகைகளில் எனது பாடல் எழுதி வைக்க ஆசை - என் மனசு 3. வானவில்லை கொஞ்சம் வளைத்துவீணையாக்கிமீட்டி பாட ஆசை மனசுக்குள் ஆசை வானில் தூதருடன் இயேசு வரும் பொழுது - என் பாடல் பாடி பறந்து செல்ல ஆசை - என் மனசு 4. குமரியில் நான் பாட இமயமதில் எதிரொலிக்க ஆசை மனசுக்குள் ஆசை எல்லா தேசத்திலும் எல்லா மொழிகளிலும் - வியாசர் லாரன்ஸ் பாடல் உலகம் பாடம் ஆசை - என் மனசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Manasukkulla Sila Aasaigal - En Idhaya Veenai Ezhuppukindra Osaigal Naan Natanthu Vandha Paathaiyil Ennai Naesittha Iraivaa Malar Idhazh Maelae Panitthuli Pol Anpu Vaitthavarae 1. Kaalai Naera Paniyil Kaalaara Natanthu Sella Aasai Manasukkul Aasai Aethaen Thottatthilae En Yesuvin Karam Kortthu Natanthu Sella Aasai - En Manasu 2. Seenaay Malai Kotumutiyil Mosae Pol Amarnthu Jepikka Aasai Manasukkul Aasai Devan Etutthu Thandha Andha Palakaigalil Enathu Paadal Ezhuthi Vaikka Aasai - En Manasu 3. Vaanavillai Konjjam Valaitthuveenaiyaakkimeetti Paada Aasai Manasukkul Aasai Vaanil Thoodharudan Yesu Varum Pozhuthu - En Paadal Paati Paranthu Sella Aasai - En Manasu 4. Kumariyil Naan Paada Imayamathil Ethirolikka Aasai Manasukkul Aasai Ellaa Thaesatthilum Ellaa Mozhigalilum - Viyaasar Laarans Paadal Ulakam Paadam Aasai - En Manasu