பாடல் #32554
தேவனே என் ஆண்டவா
🔤 Devanae En Aandavaa
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே என் ஆண்டவா உம்மை மறந்த பாவி என் மீதிலே மிகுந்த கிருபை பொழிந்தது - நான் பாடுவேன் வாழ் நாளெல்லாம் 1. ஆதாமின் இலையிலமர்ந்து அறிவுக்கனி நான் புசித்ததும் - அந்த ஆபிரகாம் அரையமர்ந்த லேவி தசமபாகம் கொடுத்ததும் மாம்சத்தில் நான் பிறக்குமுன் - என் பாவம் தீர நீர் மரித்ததும் அதிசயம் மா அதிசயம் - இந்த அகிலம் அறிய ஆச்சரியம் 2. மரத்தின் பின்னால் ஒளிந்து மனிதன் மகிமை ஆடையை இழந்தது - மரத் தழைகள் தின்னும் மிருகம் ஒன்று - தான் தோலை துணியாய் கொடுத்ததும் மரத்தி லான தோர் சிலுவையை - எங்கள் மகிமை தேவன் சுமந்ததும் ஆச்சரியம் மா ஆச்சர்யம் - இந்த உலகை மாற்றிய சரித்திரம் 3. மரித்த சாமுவேல் எழும்பினாரென்று பரிசுத்தர் சிலர் உரைப்பதும் - இன்னும் மரித்த ஆவிகள் உலவுறாரென வசனத்தை துணைக்கழைப்பதும் உயிர்தெழுந்த தேவ மைந்தன் - சிலர் மீண்டும் சிலுவையிலறைவதும் அதிசயம் இது ஆச்சரியம் - தூய ஆவிக்கெதிரான விசித்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae En Aandavaa Ummai Marandha Paavi En Meethilae Mikundha Kirupai Pozhindhathu - Naan Paatuvaen Vaazh Naalellaam 1. Aathaamin Ilaiyilamarnthu Arivukkani Naan Pusitthathum - Andha Aapirakaam Araiyamarndha Laevi Thasamapaagam Kotutthathum Maamsatthil Naan Pirakkumun - En Paavam Theera Neer Maritthathum Athisayam Maa Athisayam - Indha Akilam Ariya Aacchariyam 2. Maratthin Pinnaal Olinthu Manidhan Makimai Aataiyai Izhandhathu - Marath Thazhaigal Thinnum Mirugam Onru - Thaan Tholai Thuniyaay Kotutthathum Maratthi Laana Thor Siluvaiyai - Enggal Makimai Devan Sumandhathum Aacchariyam Maa Aaccharyam - Indha Ulakai Maarriya Saritthiram 3. Marittha Saamuvael Ezhumpinaarenru Parisutthar Silar Uraippathum - Innum Marittha Aavigal Ulavuraarena Vasanatthai Thunaikkazhaippathum Uyirthezhundha Thaeva Maindhan - Silar Meentum Siluvaiyilaraivathum Athisayam Ithu Aacchariyam - Thooya Aavikkethiraana Visitthiram