பாடல் #32553
எப்படி எப்படி பார்த்தாலும்
🔤 Eppati Eppati Paartthaalum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி எப்படி பார்த்தாலும் இயேசு நல்லவரே இப்படி அப்படி விலகிடாமல் காக்க வல்லவரே 1. கோடரி மரத்தின் வேரின் அருகில் வைத்தவரே கோடரி இரும்பை கூட மிதக்க விட்டவரே கொடியென நான் படம் செடியாய் இருப்பவரே கனிகளும் எனில் மிகுந்திட - அருள் வரம் தரும் உயர் கிருபைகள் மிகும் - எப்படி 2. களைகள் பிடுங்கி தீயில் எறிவேன் என்றவரே களைகளை பயிரின் நடுவில் வளர விட்டவரே களைகளின் நடுவினில் பயிரென வளர்ந்திடுவேன் கதிர் மணியென பதர் பறந்திட களஞ்சியமாகத் சேர்த்துவிடுவார் - எப்படி 3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என்றவரே நான் என்னில் இல்லையென்று உணர வைத்தவரே செம்மையான இதயங்கொண்ட நீதியுள்ள மனிதனுக்கு வெளிச்சம் மகிழ்ச்சி விதைத்து வைத்தவர் விரைவில் அதை முளைக்கச் செய்வார் - எப்படி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Eppati Paartthaalum Yesu Nallavarae Ippati Appati Vilakitaamal Kaakka Vallavarae 1. Kodari Maratthin Vaerin Arukil Vaitthavarae Kodari Irumpai Kooda Midhakka Vittavarae Kotiyena Naan Patam Setiyaay Iruppavarae Kanigalum Enil Mikunthida - Arul Varam Tharum Uyar Kirupaigal Mikum - Eppati 2. Kalaigal Pitungki Theeyil Erivaen Endravarae Kalaigalai Payirin Natuvil Valara Vittavarae Kalaigalin Natuvinil Payirena Valarnthituvaen Kathir Maniyena Pathar Paranthida Kalanjsiyamaagath Saertthuvituvaar - Eppati 3. Nanmaiyum Kirupaiyum Ennaith Thodarum Endravarae Naan Ennil Illaiyenru Unara Vaitthavarae Semmaiyaana Idhayangkonda Neethiyulla Manidhanukku Veliccham Makizhchsi Vithaitthu Vaitthavar Viraivil Athai Mulaikkach Seyvaar - Eppati