பாடல் #32543
கொஞ்சி கொஞ்சி பேசி
🔤 Konjsi Konjsi Paesi
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொஞ்சி கொஞ்சி பேசி மயக்கும் வஞ்சகமான மாய உலகம் கெஞ்சி கெஞ்சி அழுதால் நஞ்சு போல உன்னை அழிக்கும் உலகை நம்பினால் மரணம் - நீ தப்பிடுவாய் இது தருணம் 1. நீர்மேல் எழுத்தாகி நீல வானில் புகையாகி நீர் குமிழி போல் மின்னி நிமிஷத்துல உடைந்துவிடும் பொல்லாத உலகமிது மெய்யான வழியும் எது - கொஞ்சி 2. வாராத நிலவைக் காட்டி வா வா என்பேன் தாயாரும் கண்ணிழந்த சேயைக்கூட கண்ணே என்று அழைத்திடுவேன் பொல்லாத உலகமிது மெய்யான வழியும் எது - கொஞ்சி 3. ராசா என்று தந்தையும் கூசாமல் அழைத்திடுவேன் குந்த ஒரு இடமுமில்லை தந்தை மாற்ற வழியுமில்லை பொல்லாத உலகமிது மெய்யான வழியும் எது - கொஞ்சி 4. சூழ்ந்திருக்கும் சொந்த பந்தம் வீழ்ந்துவிட்டால் விலகிவிடும் வெந்த புண்ணில் வேல் நுழையும் வேதனைதான் மாதம் வரும் நல்லாயன் இயேசு வல்லால் மெய்யான வழியும் இல்லை தள்ளாமல் சேர்ந்திடுவீர் மெய் வாழ்வு எனக்கருள்வாய் - கொஞ்சி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Konjsi Konjsi Paesi Mayakkum Vanjjakamaana Maaya Ulakam Kenjsi Kenjsi Azhuthaal Nanjsu Pola Unnai Azhikkum Ulakai Nampinaal Maranam - Nee Thappituvaay Ithu Tharunam 1. Neermael Ezhutthaaki Neela Vaanil Pukaiyaaki Neer Kumizhi Pol Minni Nimishatthula Utainthuvitum Pollaadha Ulakamithu Meyyaana Vazhiyum Ethu - Konjsi 2. Vaaraadha Nilavaik Kaatti Vaa Vaa Enpaen Thaayaarum Kannizhandha Saeyaikkooda Kannae Enru Azhaitthituvaen Pollaadha Ulakamithu Meyyaana Vazhiyum Ethu - Konjsi 3. Raasaa Enru Thanthaiyum Koosaamal Azhaitthituvaen Kundha Oru Idamumillai Thanthai Maartra Vazhiyumillai Pollaadha Ulakamithu Meyyaana Vazhiyum Ethu - Konjsi 4. Soozhnthirukkum Sondha Pandham Veezhnthuvittaal Vilakivitum Vendha Punnil Vael Nuzhaiyum Vaedhanaithaan Maadham Varum Nallaayan Yesu Vallaal Meyyaana Vazhiyum Illai Thallaamal Saernthituveer Mey Vaazhvu Enakkarulvaay - Konjsi