பாடல் #32542
பஞ்சு நானொரு
🔤 Panjsu Naanoru
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பஞ்சு நானொரு பாவியென் தஞ்சம் உன் திரு தாளையா அஞ்சலின் றருள்வாய் - பரண் மஞ்சனே மனுவேலனே - பஞ்சு 1. நாடி உன் புகழ் நாயினேன் பாடிட பதினாயிரம் கோடி நாவுள தாயினும் கூடுமோ குமரேசனே - பஞ்சு 2. பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல் யார் தெய்வமே உனை சேவித்திங் குய்யும் நல்வரம் உதவுவாய் - பஞ்சு 3. அண்ணலே உனதாலயம் நன்னி நல்லுணர்வோடுனை எண்ணி எண்ணி இறைஞ்ச - உம் கண்ணில் இன்னருள் காட்டுவாய் - பஞ்சு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Panjsu Naanoru Paaviyen Thanjjam Un Thiru Thaalaiyaa Anjjalin Rarulvaay - Paran Manjjanae Manuvaelanae - Panjsu 1. Naati Un Pugazh Naayinaen Paatida Pathinaayiram Koti Naavula Thaayinum Kootumo Kumaraesanae - Panjsu 2. Poyyum Vanjjamum Pokkiyae Meyyum Anpum Vitaamal Yaar Theyvamae Unai Saevitthing Kuyyum Nalvaram Udhavuvaay - Panjsu 3. Annalae Unathaalayam Nanni Nallunarvotunai Enni Enni Irainjja - Um Kannil Innarul Kaattuvaay - Panjsu