பாடல் #32536
கலைந்த மேகம்
🔤 Kalaindha Maegam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலைந்த மேகம் தான் உன் நினைவோ உருக்குலைந்த சிலைதான் உன் நிலையே வாழ்வை இழந்தாயோ - கொடுமை தாழ்வில் இணைந்தாயோ உடைந்த கலயம் அழிந்த கோலம் ஆனதால் மனம் நொறுங்கிப் போன - வாழ்வை 1. உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே பிள்ளையைப் போலே ஏந்திடுவேனே தயங்காதே மதி மயங்காதே - உன் தேற்றவே நான் வந்தேன் - வாழ்வை 2. இமைப்பொழுதேனும் உறங்கவிடாமல் கண்களை உன் மேல் வைத்திருந்தேன் கலங்காதே மனம் தளராதே - உனை மீட்கவே நான் வந்தேன் - வாழ்வை 3. இகம் உருவாகி நிலைபெறுமுன்னே எலும்புகள் முதலாய் உன்னை அறிவேன் பூமியின் தாழ்விடம் உன் பிறப்பிடமே - அங்கு திரும்புமுன் மனம் திருந்து - வாழ்வை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalaindha Maegam Thaan Un Ninaivo Urukkulaindha Silaithaan Un Nilaiyae Vaazhvai Izhanthaayo - Kotumai Thaazhvil Inainthaayo Utaindha Kalayam Azhindha Kolam Aanathaal Manam Norungkip Pona - Vaazhvai 1. Ullangkaiyil Unnai Varainthaenae Pillaiyaip Polae Aenthituvaenae Thayangkaathae Mathi Mayangkaathae - Un Thaertravae Naan Vanthaen - Vaazhvai 2. Imaippozhuthaenum Uranggavitaamal Kankalai Un Mael Vaitthirunthaen Kalangkaathae Manam Thalaraathae - Unai Meetkavae Naan Vanthaen - Vaazhvai 3. Igam Uruvaaki Nilaiperumunnae Elumpugal Mudhalaay Unnai Arivaen Poomiyin Thaazhvidam Un Pirappidamae - Angku Thirumpumun Manam Thirunthu - Vaazhvai