பாடல் #32535
தொங்க விட்ட சதை
🔤 Thongga Vitta Sathai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொங்க விட்ட சதைகளிலே மேலாடை போர்த்தி அதில் சிலுவையை தூக்கி வைத்து பங்கமுற சவுக்கடியும் பல வாங்கி நெடுந்தூரம் நடந்து வந்த தங்க மகன் கல்வாரியில் தள்ளப்பட்டார் அவர் அங்கியினை உரிக்கையிலே உறைந்த இரத்தம் மறுபடியும் அழுத்தம்மா .. இயேசு என்றொரு வார்த்தை சொன்னால் உள்ளம் பொங்குதே ஜீவ ஊற்று மூழ்கினேன் - என் பாவம் மறைந்திடுதே 1. வாழ்வில் வந்த தேவனே - நீர் தாங்கி வந்த சிலுவையை தாங்கிட தயை தரணும் தயாபர வரமருளும் - இயேசு 2. சஞ்சல நேரம் தாழ்த்தி என்னை தனித்து மௌனமே காக்கிறேன் மிகுந்த கிருபை நிறைந்த தேவா இரங்குமே எந்தன் மீதில் - இயேசு 3. தாழ்ந்து போன உலகை மீட்க உயர்ந்ததோ உந்தன் சிலுவையே உழுத நிலம் போல ஆனதோ - ஒரு பழுதிலா திருமேனியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thongga Vitta Sathaigalilae Maelaatai Portthi Athil Siluvaiyai Thookki Vaitthu Panggamura Savukkatiyum Pala Vaangki Netunthooram Natanthu Vandha Thangga Makan Kalvaariyil Thallappattaar Avar Angkiyinai Urikkaiyilae Uraindha Rattham Marubatiyum Azhutthammaa .. Yesu Enroru Vaartthai Sonnaal Ullam Pongkuthae Jeeva Oorru Moozhkinaen - En Paavam Marainthituthae 1. Vaazhvil Vandha Devanae - Neer Thaangki Vandha Siluvaiyai Thaangkida Thayai Tharanum Thayaabara Varamarulum - Yesu 2. Sanjjala Naeram Thaazhtthi Ennai Thanitthu Maunamae Kaakkiraen Mikundha Kirupai Niraindha Thaevaa Irangkumae Endhan Meethil - Yesu 3. Thaazhnthu Pona Ulakai Meetka Uyarndhatho Undhan Siluvaiyae Uzhudha Nilam Pola Aanatho - Oru Pazhuthilaa Thirumaeniyae