பாடல் #32533
கேட்டதை எல்லாம் தருவார்
🔤 Kaettathai Ellaam Tharuvaar
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேட்டதை எல்லாம் தருவார் இயேசு ராஜனே கேளாதும் தருவார் நித்திய தேவனே அமுக்கி குலுக்கி மடியில் சரிந்து விழும்படி தருவார் - நீ அளந்து கொடுக்கும் அளவெதுவோ அதன்படி தருவார் அறிந்திடாத எட்டாத பெருங் காரியம் செய்வார் - நீ 1. பறவைகளைப் பார் அவை விதைப்பதுமில்லை அறுத்ததையெல்லாம் களம் சேர்ப்பதுமில்லை பசியோடு பறந்த பறவை பார்த்ததில்லையே பிழைப்பூட்டும் பரமன் இயேசு துணை இருக்கையிலே - கேட்ட 2. வண்ண மலர்களை பார் அவை உழைப்பதுமில்லை - தம் உடைகளுக்காக அவை நூற்பதுமில்லை அது போல அழகு மேனி நமக்கில்லையே சாலமோன் அது போல அணிந்ததில்லை - கேட்ட 3. கவலையினால் முழம் கூடுவதுண்டோ விசாரத்தினாலே பொருள் அசைவதுமுண்டோ ஆகாரம் காட்டிலும் நாம் ஜீவன் உயர்ந்தது ஆடைகளை காட்டிலும் நம் உடலும் சிறந்தது - கேட்ட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaettathai Ellaam Tharuvaar Yesu Raajanae Kaelaathum Tharuvaar Nitthiya Devanae Amukki Kulukki Matiyil Sarinthu Vizhumbati Tharuvaar - Nee Alanthu Kotukkum Alavethuvo Adhanbati Tharuvaar Arinthitaadha Ettaadha Perung Kaariyam Seyvaar - Nee 1. Paravaigalaip Paar Avai Vithaippathumillai Arutthathaiyellaam Kalam Saerppathumillai Pasiyotu Parandha Paravai Paartthathillaiyae Pizhaippoottum Paraman Yesu Thunai Irukkaiyilae - Kaetta 2. Vanna Malarkalai Paar Avai Uzhaippathumillai - Tham Utaigalukkaaga Avai Noorpathumillai Athu Pola Azhaku Maeni Namakkillaiyae Saalamon Athu Pola Anindhathillai - Kaetta 3. Kavalaiyinaal Muzham Kootuvathunto Visaaratthinaalae Porul Asaivathumunto Aakaaram Kaattilum Naam Jeevan Uyarndhathu Aataigalai Kaattilum Nam Udalum Sirandhathu - Kaetta