பாடல் #32532
சாதிகள் இல்லையடி
🔤 Saathigal Illaiyati
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாதிகள் இல்லையடி - குலத் பேதங்கள் யாவும் பாதகர் புனைந்துரை மாயமடா-கொடும் பேயனின் வேலையடா - உனை தீ நரகம் தள்ளும் தீமையடா - சாதிகள் 1. உயர்ந்தவர் தாழ்ந்தவர் உலகினில் உண்டென்று உன்னதர் சொன்னதுண்டா - நீ நிறத்தில் சிவந்தவன் கறுத்தவன் என்று கர்த்தர் பிரித்ததுண்டா வறியவர் வருகையால் வேண்டாமென்று - எங்கள் வானவர் தடுத்ததுண்டா - பொருள் பெருத்தவர் முகத்தினை கண்டு எம் பருமன் புன்னகை புரிந்ததுண்டா - அது சரியான ஏற்றதுண்டா - வேத சரித்திரம் சொன்னதுண்டா - சாதிகள் 2. படித்தவன் பாமரன் இளைத்தவன் கொழுத்தவன் என்பவர் நினைத்ததுண்டா - ஒரு எஜமான் அடிமை பிரிவினை உண்டென்று இறைவன் பகுத்ததுண்டா கிரேக்கரும் யூதனும் ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவர் சலித்ததுண்டா கல்வாரியின் அன்பதை பேதங்கள் பார்த்து கர்த்தர் பொழிந்ததுண்டா - நீ வருகையில் தடுத்ததுண்டா - உனை சேர்த்திட மறுத்ததுண்டா - சாதிகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saathigal Illaiyati - Kulath Paedhanggal Yaavum Paadhakar Punainthurai Maayamataa-kotum Paeyanin Vaelaiyataa - Unai Thee Narakam Thallum Theemaiyataa - Saathigal 1. Uyarndhavar Thaazhndhavar Ulakinil Untenru Unnathar Sonnathuntaa - Nee Niratthil Sivandhavan Karutthavan Enru Kartthar Piritthathuntaa Variyavar Varukaiyaal Vaentaamenru - Enggal Vaanavar Thatutthathuntaa - Porul Perutthavar Mugatthinai Kantu Em Paruman Punnakai Purindhathuntaa - Athu Sariyaana Aertrathuntaa - Vaedha Saritthiram Sonnathuntaa - Saathigal 2. Patitthavan Paamaran Ilaitthavan Kozhutthavan Enbavar Ninaitthathuntaa - Oru Ejamaan Atimai Pirivinai Untenru Iraivan Pakutthathuntaa Kiraekkarum Yoodhanum Aanenrum Pennenrum Aandavar Salitthathuntaa Kalvaariyin Anbathai Paedhanggal Paartthu Kartthar Pozhindhathuntaa - Nee Varukaiyil Thatutthathuntaa - Unai Saertthida Marutthathuntaa - Saathigal