பாடல் #32503
விண்னுலகம் விட்டு மண்ணுலகம்
🎙 கிறிஸ்தவ பாடல்
விண்னுலகம் விட்டு மண்ணுலகம் வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம் -2 எந்தன் பாவங்களை தீர்த்திடவே பலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும் ஈடில்லை -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண , முடியாமல் கண்கள் மூடிடுதே, -2 ஒருவரும் சேரா கூடாத தேவா எனக்காய் உலகில் வந்தீரே. -2 2. ஆதியும் நீரே அந்தமும் நீரே தூதர்கள் போற்றும் தூயவரே -2 பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே.-2