பாடல் #32500
ஏகிடுவேன் சியோன் நகர்
🔤 Aekituvaen Siyon Nakar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏகிடுவேன் சியோன் நகர் இயேசுவை நோக்கி கொண்டு ஏதுமில்லா ஜீவியத்தில் ஏகோபித்து என்றென்றுமே - ஏகி 1. பாரமான யாவற்றையும் பாவத்தையும் தள்ளிவிட்டு பாரினில் முன்னோடி சென்ற பக்தர்களின் பாதை சேர்ந்து - ஏகி 2. சத்திய மரைக்கசைத்து நீதியை மார்பிலிழைத்து சத்துருவினம்பைத் தடுக்க தரித்து விஸ்வாசத்தையும் - ஏகி 3. ஆயத்தத்தைப் பாதமிட்டு ஆவியின் பட்டயமெடுத்து அண்ணலீந்த ரட்சண்யத்தை ஆவலாய்த் தலைக்கணிந்து, - ஏகி 4. தண்ணீர்த் தடாகமுண்டு தாவியோடும் நதிகளுண்டு தாகமடைவோ ரெல்லாம் தாராளமாகப் பெருகிடவே - ஏகி 5. சிங்கம் புலி கரடி சீறும் துஷ்ட மிருகமங்கே சென்றிடவோ மார்க்கமில்லை செல்லுவோமே தீவிரமாய் - ஏகி 6. தீட்டுள்ளவன் செல்லாத ஓர் திவ்யமான பாதை இது. தீவிரமாக சென்றிடுவோம் தூயரெல்லாம் ஆனந்தமாய் - ஏகி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aekituvaen Siyon Nakar Yesuvai Nokki Kontu Aethumillaa Jeeviyatthil Aekopitthu Enrenrumae - Aeki 1. Paaramaana Yaavarraiyum Paavatthaiyum Thallivittu Paarinil Munnoti Sendra Paktharkalin Paathai Saernthu - Aeki 2. Satthiya Maraikkasaitthu Neethiyai Maarpilizhaitthu Satthuruvinampaith Thatukka Tharitthu Visvaasatthaiyum - Aeki 3. Aayatthatthaip Paadhamittu Aaviyin Pattayametutthu Annaleendha Ratsanyatthai Aavalaayth Thalaikkaninthu, - Aeki 4. Thanneerth Thataagamuntu Thaaviyotum Nathigaluntu Thaagamataivo Rellaam Thaaraalamaagap Perukidavae - Aeki 5. Singgam Puli Karati Seerum Thushta Mirugamangkae Senridavo Maarkkamillai Selluvomae Theeviramaay - Aeki 6. Theettullavan Sellaadha Or Thivyamaana Paathai Ithu. Theeviramaaga Senrituvom Thooyarellaam Aanandhamaay - Aeki