பாடல் #32493
இயேசு தானே பெத்தலையில்
🔤 Yesu Thaanae Petthalaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு தானே பெத்தலையில் வாசன் எனை மீட்க வந்த குருநாதன் கனமேவு கானானின் வாசன் காட்டிடையர் வணங்கும் நேசன் - இயேசு 1. கருணாகரப் பரம தேவா காதல் கொடுத்திடவும் வா வா ஆதார முன்னை யன்றி யாரே ஆ! குடில் வந்த பவநாசா - இயேசு 2. கோடா கோடி தூதர்கள் போற்ற குவலயம் வந்தனீரோ கோனே" அவலன் அழிம்பழிக்கத் தானோ அன்பாலே தேடி வந்த தேனே - இயேசு 3. மங்கா உடு வழியில் மாக ஜோதிடர் பின்னாலே மன்னன் ஏரோது மனங்கலங்க மகிழ்ந்து உதித்த மனுவேலே - இயேசு 4. காதல் என் கொள்ளவும் தானோ காப்ரியேல் உரைத்த விண்கோனே நாதம் வானிலுரைக்கத் தேனோ வேதம் எனக்களித்த தேனே - இயேசு 5. மா சீயோன் மலை வாசம் மண மங்கையின் நேசம் என் ஆத்ம நேசர் தாகம் எந்நாளும் உள்ளத்தில் சோகம் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Thaanae Petthalaiyil Vaasan Enai Meetka Vandha Kurunaadhan Kanamaevu Kaanaanin Vaasan Kaattitaiyar Vanangkum Naesan - Yesu 1. Karunaagarap Parama Thaevaa Kaadhal Kotutthidavum Vaa Vaa Aathaara Munnai Yanri Yaarae Aa! Kutil Vandha Pavanaasaa - Yesu 2. Kotaa Koti Thoodharkal Portra Kuvalayam Vandhaneero Konae" Avalan Azhimbazhikkath Thaano Anpaalae Thaeti Vandha Thaenae - Yesu 3. Mangkaa Utu Vazhiyil Maaga Jothidar Pinnaalae Mannan Aerothu Mananggalangga Makizhnthu Uthittha Manuvaelae - Yesu 4. Kaadhal En Kollavum Thaano Kaapriyael Uraittha Vinkonae Naadham Vaaniluraikkath Thaeno Vaedham Enakkalittha Thaenae - Yesu 5. Maa Seeyon Malai Vaasam Mana Mangkaiyin Naesam En Aathma Naesar Thaagam Ennaalum Ullatthil Sogam - Yesu