பாடல் #32490
ஜீவ கிரீடம் சூடும் நேரம்
🎙 கிறிஸ்தவ பாடல்
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்னவோ இன்பம் - விண்ணில் ஜீவனுள்ளோர் கூடும் வேளை என்ன பேரின்பம் 1. ஏகமாக அகில சிருஷ்டிகள் சுகமாக தவித்து எதிர் நோக்கும் மகா தினமும் வரவு மகிமை கிரீடங்கள் பெறவே - ஜீவ 2. அம்மினதாபின் ரதம் போல அம்பரன் அழைத்திட வரவே சம்பூரண சந்தோஷம் சமுகமதில் பெற்றுறவே - ஜீவ 3. மின்னும் சுர கின்னர் கீதம் விண்ணின்று தனித்திடும் நேரம் மண்ணினின்றேகும் துயர் மன்னருடன் மகிழ்வடைந்து - ஜீவ 4. பதி, தன, ஜன கன தை விடவும் கதி பரண் மலர் பாதம் என்றவர் பரிகாசங்கள் அவமானம் பசி தாகமுமடைந்தவரும் - ஜீவ 5. சற்று நேர வற்றிடு மின்பம் பற்றிடாத கற்புடையவரும் கர்த்தனளிக்கும் பலனைக் கருத்தாக முன்வைத்தவரும் - ஜீவ