பாடல் #32487
என்ன தான் பதில்
🔤 Enna Thaan Pathil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன தான் பதில் செய்வேன் கண்டிடும் வேளை அன்னையே பதில் கூறும் செய்வேனிவ் வேழை 1. எண்ணொணாப் பாவத்தால் உம்மை வாதித்தேனையா மன்னித்தீர் என்னையும் மாதயவதாகவே - என்ன 2. அண்டினேன் பாதமே ஆண்டுகொள்ளுவீரே நன்றியால் பொங்குதுள்ளம் என்ன பதில் செய்வேன் - என்ன 3. நானிலம் தன்னில் நிந்தையாகினாலுமே நாதனே! நான் விடேன் நசரேயன் பாதமே - என்ன 4. ஏதுக்கும் உதவா ஏகலித்த ஏழை யான் ஏற்றீரோ என்னையும் சேர்த்தீரோ மந்தையில் - என்ன 5. இன்னிசைக் கேட்டாலும் இன்பமுண்டோ பாவியில் விண்ணெனைச் சேர்க்கவுயிர் சிலுவையில் விடுத்தீர் - என்ன 6. கன்னத் தறையையும் கனமான குருசையும் அன்பாலோ சகித்தீர் அன்பனே, அன்பனே - என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Thaan Pathil Seyvaen Kantitum Vaelai Annaiyae Pathil Koorum Seyvaeniv Vaezhai 1. Ennonaap Paavatthaal Ummai Vaathitthaenaiyaa Mannittheer Ennaiyum Maadhayavathaagavae - Enna 2. Antinaen Paadhamae Aantukolluveerae Nanriyaal Pongkuthullam Enna Pathil Seyvaen - Enna 3. Naanilam Thannil Ninthaiyaakinaalumae Naadhanae! Naan Vitaen Nasaraeyan Paadhamae - Enna 4. Aethukkum Udhavaa Aegalittha Aezhai Yaan Aerreero Ennaiyum Saerttheero Manthaiyil - Enna 5. Innisaik Kaettaalum Inbamunto Paaviyil Vinnenaich Saerkkavuyir Siluvaiyil Vituttheer - Enna 6. Kannath Tharaiyaiyum Kanamaana Kurusaiyum Anpaalo Sakittheer Anbanae, Anbanae - Enna